ஹிந்துக்களுக்கு எதிரானது திமுக : பியூஷ் கோயல்
புதுடில்லி: '' திமுக மற்றும் இண்டி கூட்டணி ஹிந்துக்களுக்கு எதிரானது என்பது தற்போது அம்பலமாகி உள்ளது,'' என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
மன நிறைவு
இது தொடர்பாக தமிழக பாஜ தேர்தல் பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான பியூஷ் கோயல் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: திருப்பரங்குன்றம் மலை உச்சியில், பல நூற்றாண்டுகளாக கடவுள் முருகனை வணங்கி தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அத்தகைய கோயில் பக்தர்களுக்கு, தமிழக உயர்நீதிமன்றம், இன்று பிறப்பித்த உத்தரவின் மூலம் நீதி வழங்கி உள்ளது மனநிறைவை அளிக்கிறது.
@quote@தமிழக முதல்வர் ஸ்டாலின், அவரது மகன் உதயநிதி மற்றும் திமுக அமைச்சர்கள் சனாதன தர்மத்தை தொடர்ந்து கடுமையாக விமர்சிப்பதும், கேலி செய்வதும், தாக்குவதும் ஒரு சாதாரண தற்செயல் நிகழ்வு அல்ல.quote
நீதிபதி அனுமதி
2023 செப்.,2 அன்று சனாதன தர்மத்தையே ஒழிக்க வேண்டும் என உதயநிதி ஒரு துணிச்சலான மற்றும் கண்டிக்கத்தக்க கோரிக்கையை முன்வைத்தார். அதற்கு சில மாதங்களுக்கு பிறகு, முதன்முறையாக திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றுவது தடுக்கப்பட்டது. இந்த இரண்டு தற்செயல் நிகழ்வுகள் கவனிக்காமல் இருக்கக்கூடாது.
@block_B@2024ம் ஆண்டு, பாரம்பரியத்தை தொடர அனுமதிக்கவில்லை. பக்தர்கள் நீதி கேட்டு நீதிமன்றத்தை நாடினர். இதனையடுத்து 2025 டிச.,1 அன்று, நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு மூலம் தீபம் ஏற்றும் வழக்கத்தை தொடர அனுமதித்தார்.block_B
முருகன் வீற்று இருக்கும் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள பழமையான கோயிலின் பக்தர்களுக்கு இன்று தமிழக உயர்நீதிமன்றம் நீதி வழங்கி உள்ளது. இது திருப்தியை அளிக்கிறது. பல நூண்ணாண்டுகளாக முருகனை வணங்கி விளக்குகள் ஏற்றப்பட்டு வருகின்றன. பல நூற்றாண்டுகளாக ஹிந்து தர்மம், இறைவனை போற்றி விளக்கு ஏற்றும் வளக்கத்தை கடைபிடித்து வருகிறது.
வெறுப்பு
ஆனால், துரதிர்ஷ்டவசமாக நீதிபதியின் தீர்ப்புக்கு எதிராக அரசு மேல்முறையீடு செய்தது. இது ஹிந்து தர்மத்திற்கும், சனாதன தர்மத்திற்கும் எதிராக ஒரு தலைபட்சமான போக்கையும், ஹிந்துக்களுக்கு எதிரான மனநிலையையும் தெளிவாக பிரதிபலிக்கிறது.
@quote@உண்மையில், இது ஸ்டாலின், அவரது மகன், திமுக மற்றும் இண்டி கூட்டணியில் உள்ள அவர்களின் நண்பர்களின் வெறுப்பையே இது காட்டுகிறது.quote
அச்சுறுத்தல்
மதுரை திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி செய்துள்ளது. நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்கத் தீர்மானத்திலும் அவர்களின் மனநிலை பிரதிபலித்தது. இந்த பதவி நீக்கத் தீர்மானத்தில் பிரியங்கா, டிம்பிள் யாதவ், சுப்ரியா சுலே, உத்தவ் தாக்கரே, மற்றும் ஹிந்து விரோத முயற்சியில் முன்னணியில் இருக்கும் திமுகவின் மூத்த தலைவர்கள் மற்றும் எம்பிக்கள் உள்ளிட்ட இண்டி கூட்டணியின் பல்வேறு எம்பிக்களால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
@block_Y@ஒரு தீர்ப்பு காரணமாக நீதிபதி சுவாமிநாதனை, மதச்சார்பற்றவர் அல்ல என்ற முத்திரை குத்தி, அவருக்கு எதிராக அனைத்து பொய்க் குற்றச்சாட்டுகளையும் சுமத்தி, இந்த பதவி நீக்கத் தீர்மானத்தை தாக்கல் செய்வதன் மூலம் அவர்கள் நீதித்துறையை அச்சுறுத்த முயற்சிக்கின்றனர்.block_Y
ஓட்டு வங்கி அரசியல்
திமுக மற்றும் இண்டி கூட்டணி ஹிந்துக்களுக்கு எதிரானவை என்பது அம்பலமாகி உள்ளது. இது பழங்கால வழக்கம் என்பதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. மாநில அரசின் சட்டம் ஒழுங்கு குறித்த வாதம் பொய் என நிரூபிக்கப்பட்டுள்ளது. அது அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு கற்பனையான பிரச்னை. கடந்த காலத்தில் எந்த பிரச்னையும் இருந்தது இல்லை. இது ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரை திருப்திப்படுத்தும் நோக்கம் கொண்ட ஓட்டு வங்கி அரசியலைத் தவிர வேறு ஒன்றுமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
இவனுங்களுக்கு திருப்பரங்குன்றம் ன்னு பிழையில்லாமல் சொல்ல சொல்லுங்க பாப்போம். எங்கே இருக்குன்னு கேளுங்க? வரிசையா வர்றாங்க லாவணி பாடிக்கிட்டு. மதுரையிலே இதெல்லாம் செல்லாது.
யாரு பியூஷ் கோயல் இவ்வளவும் சொன்னாரா எங்க இதெல்லாம் நம்புறமாதிரிய இருக்கு
திராவிஷம் ஹிந்துக்களுக்கு மட்டுமே எதிரி.. கேக் க்கும், பிரியாணிக்கும் உற்ற தோழன்.. திராவிஷத்திற்கு ஒட்டு போடும் ஹிந்துக்களும் இலவச கேக் க்கும், குவாட்டருக்கும், பிரியாணிக்கும் அடிமைகள்.... திரவிஷம் மட்டும் அல்ல.. திராவிஷத்திற்கு வாக்களிக்கும் ஒவ்வொருவரும், ஒவ்வொரு ஹிந்துவுமே ஹிந்து மதத்திற்கு எதிரிகள்த்தான்...
ஹிந்துக்களுக்கு துரோகம் செய்வது பாஜக. துரோகியை நம்புவதை விட எதிரியை நம்பலாம்!
இது இந்துவிரோத கட்சி மட்டுமல்ல மனித சமுதாயத்திற்கு தீங்கு விளைவிக்கும் கட்சி. நீதியரசர் ஜி ஆர் சாமிநாதன் தீர்ப்பு வந்தவுடன் முஸ்லீம்கள், மதகுருமார்கள் அல்லது வக்போர்ட் என யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, அதேபோல இந்துக்கள் யாரும் அதை கொண்டாடவும் இல்லை. உலகில் தான் மட்டுமே சிறுபான்மையினர் காவலன் என காட்டிக்கொள்வதற்காக இல்லாத ஒரு பிரச்சனையை இருப்பதாக காட்டி மதமோதலுக்கு வித்திட்டது அரசு.
திமுகவும் கூட்டனிகட்சிகளும் இந்து தர்மத்திற்கு எதிரானவர்கள், நீதியை மதிக்காதவர்கள், 2026ல் தமிழகத்தை மீட்க வேண்டும்
திமுக இந்து விரோத கட்சி மட்டுமல்ல, தேச விரோத கட்சியும்கூட. நாட்டுக்கு விசுவாசமாக என்றுமே இருந்ததில்லை. திமுக இல்லாத தமிழகம் உருவாகவேண்டும்.
என்ன இருந்தாலும் ஒரு மாநிலம் ஒரே ஒரு மாநிலம் இந்திய ஒன்றியத்தையே கதறவிடுதுன்னா அது எங்க தமிழ்நாடுதான். நெருங்ககூட முடியல. குறைப்பு சப்தம்தான் அதிகமாய்ட்டே இருக்கு
உன்னைப் போன்ற திராவிடன் தமிழன் என்கிற பெயரில் உலா வருவதுதான் இப்போது Fashion
ஆகி விட்டது.
தமிழக மக்களும் தேர்தலில்...... இண்டி கூட்டணி ஆட்களை உங்களை கதற விடுவார்கள்
பொறு மகனே....பாரத சர்க்கார்/ பாதுகாப்பு படைகளின் பொறுமை இன்னும் எல்லை நடக்கவில்லை... மாநில எல்லைகள் சீல் செய்யப்பட்டு, பாகிஸ்தானி தொடர்பு திராவிடம் வேட்டையாடப்படும் போது உனக்கு தெரியும்...கதறல் என்றால் என்ன என்று.... வழி சுத்தம் இல்லாத கும்பலுக்கே இத்தனை நக்கல் ஏத்தம் எல்லாம் இருக்கும் போது, வெறும் பத்து ஆண்டுகளில் உலக வல்லரசுகளுக்கே டஃப் கொடுக்கும் பாரத அரசுக்கு எவ்வளவு இருக்கும்? பீடம் தெரியாமல் சாமி ஆடினால், நீங்கள் அதற்கு கொடுக்கும் விலை, வரலாற்றில் குருதி தோய்க்கப்பட்டதாக இருக்கும்.... உங்களுக்காக ஒப்பாரி வைக்கக்கூட ஈ, காக்கா வராது...
இந்துக்களே எப்படி..இந்துக்களுக்கு எதிரியாக இருக்க முடியும்... தமிழகம் உங்களுக்கு ஏற்ற சனாதன இந்து அல்ல அது திராவிடம்..
ஹிந்துக்களுக்கு எதிரானது திமுக என்ற உண்மை தற்போது வடக்கு பக்கம் கூட காது கேட்டுடுச்சு போல.. இன்னும் உலகம் பூராவும் கேட்க வேண்டும் என்பது தான் திராவிஷ விருப்பம். அப்ப தான் வெளிநாட்டு நிதிகள் இந்த "நிதி" குடும்பத்திற்கு நிறைய கிடைக்கும்.மேலும்
-
மக்கள் நம்பிக்கையின் வெளிப்பாடே பவள விழா
-
'ஆன்லைன்' சூதாட்டத்தில் மூழ்கிய மாணவர்களுக்கு 'கவுன்சிலிங்' :ஆசிரியர்களுடன் போலீசார் கை கோர்ப்பு
-
சென்னையில் 'கருடா ஏரோஸ்பேஸ்' ட்ரோன் பேட்டரி உற்பத்தி ஆலை
-
தமிழகத்தில் 32 மாவட்டங்களில் இருந்து சாப்ட்வேர் ஏற்றுமதி: முதல்வர் ஸ்டாலின்
-
சீன நிறுவனங்களுக்கு கட்டுப்பாடு நீக்கம்? அமெரிக்க நெருக்கடியை சமாளிக்க திட்டம்
-
ஓசூர் பாட்டா தொழிலாளர்களுக்கு விரைவில் வி.ஆர்.எஸ்.,