சென்னையில் கருடா ஏரோஸ்பேஸ் ட்ரோன் பேட்டரி உற்பத்தி ஆலை

சென்னை: சென்னை அருகே உள்ள தாழம்பூரில், ட்ரோன் பேட்டரி உற்பத்தி ஆலையை துவக்கி உள்ளது சென்னையை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான, கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம். இந்த ஆலை, அந்நிறுவனத்தின் செயல்பாட்டு மையத்தில் அமைந்துள்ளது.


பாரத் ட்ரோன் சங்கம் நடத்திய 'பாரத் ட்ரோன்' உதான் நிகழ்ச்சியில், சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் பைஸ் அகமது கித்வாய், இந்த ஆலையை துவக்கி வைத்தார்.

இந்த ஆலையில், ட்ரோனில் பயன்படுத்தப்படும் பேட்டரிகளை உற்பத்தி செய்வது மட்டுமின்றி, முழுமையான சோதனை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது, முக்கிய ட்ரோன் உதிரிபாகங்களை இறக்குமதி செய்வதை தவிர்த்து, உள்நாட்டு மய மாக்கலை ஊக்குவிக்கிறது.



இந்நிறுவனம் உற்பத்தி செய்யும் ட்ரோன்கள், விவசாயம், உள்கட்டமைப்பு, ராணுவ பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை, தளவாட போக்குவரத்து உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப் படுகின்றன.

Advertisement