டிக்டாக் வீடியோவால் மீண்டும் பற்றி எரியும் நேபாளம்; எல்லையை தற்காலிகமாக மூடிய இந்தியா
புதுடில்லி: நேபாளத்தில் ஏற்பட்ட வகுப்புவாத மோதல் எதிரொலியாக, அந்நாட்டுடனான எல்லைக்கு இந்தியா சீல் வைத்துள்ளது.
தனுஷா மாவட்டத்தில், கமலா நகராட்சியை சேர்ந்த ஹைதர் அன்சாரி மற்றும் அமானத் அன்சாரி ஆகியோர் சமூக ஊடகம் வழியாக வீடியோ ஒன்றை பதிவேற்றினர். அந்த வீடியோவில் குறிப்பிட்ட மதத்தை அவமதிக்கும் வகையில் சில கருத்துகள் இடம்பெற்றதாக கூறப்பட்டது. இந்த காணொளியால் நேபாளத்தில் பிரச்னை வெடித்தது. அதை தொடர்ந்து அங்குள்ள மசூதி மீது தாக்குதல் நடத்தப்பட பதற்றம் அதிகரித்தது.
குறிப்பாக, இந்த காணொளியால் தனுஷா மற்றும் பர்சா மாவட்டங்களில் வகுப்புவாத பதற்றங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த குறிப்பிட்ட இருவரையும், பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். ஆனால் சில மணி நேரங்களிலேயே கமலா நகராட்சி சகுவா மாரன் என்ற பகுதியில் பள்ளிவாசல் சேதப்படுத்தப்பட்டது.
இதனால் பிர்குஞ்ச் நகரத்தில் நிலைமை மோசம் அடைந்தது. அங்குள்ள சாலைகளில் திரண்ட ஆர்ப்பாட்டக்காரர்கள், டயர்களை எரித்தும், சாலைகளில் தடுப்புகளை வைத்தும் போராட்டத்தில் குதித்தனர்.
மேலும், அங்குள்ள உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனையும் சூறையாட பதற்றம் மற்ற பகுதிகளுக்கும் பரவ ஆரம்பித்தது. சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசி நடவடிக்கையில் இறங்கினர்.
இருப்பினும், நிலைமை பதற்றமாக இருப்பதால் பிர்குஞ்ச் பகுதியில் ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டது. பிர்குஞ்ச் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலைமை பதற்றமாக காணப்படுவதால் இந்திய-நேபாள எல்லையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
நேபாளத்துடனான எல்லையை இந்தியா தற்காலிகமாக மூடியுள்ளது. எல்லைக்கு சீல் வைத்து, அவசர நிலைகளை தவிர மற்ற அனைத்து போக்குவரத்து சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது. சஷாஸ்திர சீமாபால் எல்லையை முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-நேபாளத்தை இணைக்கும் மைத்ரி பாலம் சிறப்பு கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு, அந்த எல்லையைக் கடக்கும் ஒவ்வொருவரும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். மைத்ரி பாலம் தவிர, சஹாதேவா, மஹாதேவா, பன்டோகா, சிவான்தோலா மற்றும் முஷர்வா போன்ற எல்லை பகுதிகளிலும் ரோந்து அதிகரிக்கப்பட்டு உள்ளது.
நேபாளத்தில் நிலைமை மோசம் அடைந்து வருவதால் அங்குள்ள இந்திய தொழிலாளர்கள் தாய்நாடு திரும்பி வருகின்றனர்.
வாசகர் கருத்து (6)
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
06 ஜன,2026 - 21:53 Report Abuse
எல்லா நாடுகளிலுமே தீவிர வாதத்தை பரப்பி அதில் இன்பம் காண்கிறார்கள் எதை அடியோடு அழிக்க வேண்டும் சமாதானத்தையே அழிக்கிறார்கள் 0
0
Reply
SUBBU,MADURAI - ,இந்தியா
06 ஜன,2026 - 20:13 Report Abuse
Why cant India seal the Nepal border permanently, so many Pakistani and Bangladeshi has entered India from these routes. 0
0
Reply
Pollachi tamilan - ,இந்தியா
06 ஜன,2026 - 20:03 Report Abuse
இந்தியா நேபாள் எல்லை எல்லாமே ஓபன் லேண்ட் தான் .நீங்க போக வர பாதையில் மட்டும் கேட்டை போட்ட வரமாட்டாங்களா .
இந்தியாவை ஆண்ட மட்டும் ஆண்டு கொண்டிருக்கும் எவனுக்கும் வேலி போட அக்கறை இல்லை . 0
0
Reply
Barakat Ali - Medan,இந்தியா
06 ஜன,2026 - 18:34 Report Abuse
பிரச்னையின் துவக்கம் இதுதான் - ஹைதர் அன்சாரி மற்றும் அமானத் அன்சாரி ஆகியோர் சமூக ஊடகம் வழியாக வீடியோ ஒன்றை பதிவேற்றினர். சிறுபான்மையினராக இருக்கும்போதே இப்படிச் செய்வதால் ஹிந்துக்களின் விரோதத்தைச் சம்பாதிக்கிறார்கள் ..... 0
0
Reply
ராமகிருஷ்ணன் - ,
06 ஜன,2026 - 16:55 Report Abuse
நிச்சயமாக இது அமெரிக்க சதித்திட்டம் தான். இந்திய முன்னேற்றத்தை தடுக்க வெளிநாட்டு சதிகளை முறியடிக்க வேண்டும். அங்கு இறப்பவர்கள் யார் என்பதை தெரிந்த பிறகு இங்குள்ள இந்து தேச விரோத அல்லக்கை வாசிப்பு வாயன்கள் வரிசையில் வருவானுங்க 0
0
Reply
Anand - chennai,இந்தியா
06 ஜன,2026 - 16:43 Report Abuse
மூர்க்கம் இருக்குமிடம் குட்டிச்சுவர். 0
0
Reply
மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை
Advertisement
Advertisement