கர்நாடகாவில் நீண்ட கால முதல்வர்: சித்தராமையா சாதனை

4

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா, இன்று (ஜனவரி 6) மறைந்த முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ், சாதனையைச் சமன் செய்தார். கர்நாடகாவின் மிக நீண்ட காலம் பணியாற்றிய முதல்வர் என்ற பெருமை அவருக்கு கிடைத்துள்ளது.

கர்நாடகாவில் மறைந்த முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸ். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர் இரண்டு முறை மொத்தம் 2,792 நாட்கள்(7 ஆண்டுகள் 239 நாட்கள்) முதல்வராக பதவி வகித்துள்ளார்.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையா இன்று இந்தச் சாதனையைச் சமன் செய்து, நாளை அதை முறியடிக்கிறார்.

சித்தராமையா தனது முதல் பதவிக்காலத்தில் (2013-2018) 1,829 நாட்கள் பணியாற்றினார். மே 20, 2023 அன்று இரண்டாவது முறையாகப் பொறுப்பேற்ற அவர், தற்போது அந்தச் சாதனையை நோக்கி செல்கிறார்.
சித்தராமையா கர்நாடக வரலாற்றில் இதுவரை 16 முறை மாநில பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார், இதுவும் ஒரு சாதனையாகக் கருதப்படுகிறது.


இந்நிலையில் சித்தராமையா கூறியதாவது:
"நான் எந்தச் சாதனையும் படைப்பதற்காக அரசியல் செய்யவில்லை; இது மக்களின் ஆசீர்வாதத்தால் நேர்ந்த ஒரு தற்செயலான நிகழ்வு" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இந்தச் சாதனையை முன்னிட்டு கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

Advertisement