மாணவி குறித்து சமுகவலைதளங்களில் அவதூறு: அரசு கல்லூரி முதல்வர், கணவர் கைது

5

திருநெல்வேலி: மாணவி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாக பதிவிட்ட கல்லூரி முதல்வர் மற்றும் அவரது கணவர் இருவரை போலீசார் கைது செய்தனர்.


திருநெல்வேலியில் ராணி அண்ணா மகளிர் கல்லூரியில் முதுகலை இரண்டாம் ஆண்டு தமிழ் படிக்கும் மாணவி குறித்து சமூக வலைதளங்களில் அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, அந்த மாணவி கடந்த டிச.,1ல் திருநெல்வேலி கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்து இருந்தார். அதில், தமிழ்த்துறை தலைவராக இருந்த சுமிதா( தற்போதைய கல்லூரி முதல்வர்) சமுகவலைதள பக்கத்தில் இருந்தே அவதூறு கருத்துகள் பதிவு செய்யப்படுவதாக தெரிவித்து இருந்தார்.


மாணவியின் புகார் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கல்லூரி முதல்வர் சுமிதாவும், தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் பணியாற்றும் அவரது கணவர் பொன்னுதுரையுமே அவதூறு மற்றும் ஆபாச கருத்துக்களை பரப்பியது தெரியவந்தது.


இதனையடுத்து அவர்கள் இருவரையும் சைபர் கிரைம் போலீசார் இன்று காலை முதல் விசாரணை நடத்தினர். எட்டு மணி நேர விசாரணைக்கு பிறகு இருவரையும் கைது செய்தனர். பிறகு, சொந்த ஜாமினில் இருவரையும் விடுவித்தனர்.

Advertisement