உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டம்: தமிழக அமைச்சரவை ஒப்புதல்
சென்னை: உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு பதில்,. புதியதாக உருவாக்கப்பட்டு உள்ள தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை ஜன.3ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். முதல்வர் அறிவிப்பை தொடர்ந்து போராட்டத்தை பெரும்பாலான ஆசிரியர்கள் கைவிட்டுள்ளனர்.
ஆனால் இடைநிலை ஆசிரியர்கள் மட்டும் சம வேலைக்கு சம ஊதியம் என்று போராட்டத்தை தொடர்ந்துள்ளனர். இந் நிலையில், உறுதியளிக்கப்பட்ட புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கி உள்ளது.
அமைச்சரவை ஒப்புதலை தொடர்ந்து, புதிய ஓய்வூதிய திட்டத்துக்கான விதிமுறைகள் வகுக்கப்பட்டு, வரும் நிதியாண்டு முதல் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மேலும் அமைச்சரவை கூட்டத்தில் புதிய தொழில் கொள்கைகள், தூய்மை பணியாளர்கள் போராட்டம் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
அவர்களிடம் பிடித்தம் செய்த 10% பணம் எங்கே? இதற்கு பதில் உண்டா?
கல்விக்கு முடிவு கட்ட தீம்க்கா போடும் திட்டம் ஏற்கனவே அமலில் இருக்கிறது.. இனி தீம்க்காவுக்கு ஒட்டு மழைதான். ஆனால் கஜானாவில் பணமில்லாத காரணத்தால் தீம்க்கா ஆட்சியமைக்க தயங்கும்.
உதயநிதி ஸ்டாலின் பேரு ஓகே, அப்போ அவரோட அப்பா பேரு ஸ்டாலின் கருணாநிதி என்று இருக்கணும் இல்லையா , ஏன் நீங்க யாரும் இதை கவனிக்க மாட்டேங்கறீங்க உடன்பிறப்புகளே அல்லது கொத்தடிமை அமைச்சர்களே , கொஞ்சம் சொல்லுங்க
களிக்கு அல்வான்னு பெயர் வைக்க, அதை ஏற்று தலையாட்டும் அடிமைகள். ஆசிரியர்கள் மேல் நம்பிக்கை மக்களுக்கு போய்விட்டது. பணத்திற்காக மட்டுமே இவர்கள் போராட்டம். படிப்பை மாணவர்களுக்கு சொல்லி தருவதில் இல்லவே இல்லை.
திமுக அரசு ஊழியர்கள் அனைவரையும் முட்டாளாக்கி விட்டு திரும்ப ஆட்சிக்கு வரலாம் என்று நினைக்கிறது.ஆதலால் நாம் தேர்தலில் அவர்களுக்கு பாடம் புகட்டுவோம்
22 ஆண்டுகளாக கிடைக்காமல் இருந்தது இப்போதாவது நடைமுறைக்கு வந்திருக்கே என எண்ணாமல் விளக்கெண்ணைங்க ஏதேதோ உளறிக் கொட்டுதுங்க.
தமிழ்நாடு திவால் ஆகி விட்டால் சாதாரண மக்கள் நிம்மதியாக இருக்கலாம்.
போராட்டத்தை தூண்டிய ஜாக்டோ ஜியோ தலைவர்களை அழைத்து அவர்களை நன்கு கவனித்து அவர்களையே கேக் ஊட்டச் சொல்லி கடைசியில் வாழ்க கோஷம் போட வைத்து அதை படம் பிடித்து தமிழகம் முழுக்க பரப்பியாச்சு. நான் அன்றே சொன்னேன் இந்த திமுகவினர்
செய்யும் திருட்டுத்தனம் உடனே புரியாது இரண்டு நாள் கழித்துதான் போராட்டம் பண்ணியவர்களுக்கு திமுக கொடுத்த அல்வா தெரியவரும்
என்றேன் அதுதான் இப்போது அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்டத்தில் நடந்திருக்கிறது தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டோம் என்பதை தெரிந்து கொண்டு பாதி பேர் மீண்டும் போராட்டத்தில் இறங்கி இருக்கிறார்கள் மீதி பேர் திருடனுக்கு தேள் கொட்டியதை
போல் திரு திருவென விழித்துக் கொண்டு இருக்கிறார்கள். ஹா ஹா ஹா
திமுகவா கொக்கா?
வகுக்க பட்ட கொள்கையை ஆளும் கட்சி நீட்டிக்கலாம். புதிய கொள்கை வகுக்கும் போது, அனைத்து கட்சி உறுப்பினர்கள் ஒப்புதலை அவசியம் ஆக்க வேண்டும். அல்லது 75 சதவீத உறுப்பினர்கள் ஒப்புதல் கட்டாயம் ஆக்க வேண்டும். ஒரு கட்சி ஆயுள் 5 ஆண்டுகள். வாழ்நாள் கொள்கை எப்படி வகுக்க முடியும். தமிழக அமைச்சரவை ஒரு ஆளும் கட்சி பினாமி?மேலும்
-
ஜனநாயகன் திரைப்பட வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்