பெங்களூரில் ரூ.3.50 கோடி போதை பொருள் பறிமுதல்; இன்ஜினியர் உட்பட 2 பேர் கைது

1

பெங்களூரு: பெங்களூரில், 3.50 கோடி ரூபாய் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக, சாப்ட்வேர் இன்ஜினியர், அவரது நண்பர் கைது செய்யப்பட்டனர்.


பெங்களூரு ஓசூர் சாலையில், இறந்த ஹிந்துக்கள் உடல்களை அடக்கம் செய்யும் மயானம் அருகே, போதை பொருள் விற்பனை நடப்பதாக, அசோக்நகர் போலீசாருக்கு தகவல் வந்தது. அங்கு சென்ற போலீசார், போதைப்பொருளை விற்ற ஒருவரை கைது செய்தனர். விசாரணையில் அவர், சிக்க பானஸ்வாடியை சேர்ந்த, சாப்ட்வேர் இன்ஜினியர் தாரிக் இக்பால், 33, என்பது தெரிந்தது.


அவர் கொடுத்த தகவலின்படி, அவரது நண்பரான பையப்பனஹள்ளியில் வசிக்கும், முகமது அப்ராஜ், 29, என்பவரும் கைது செய்யப்பட்டார். இருவரிடம் இருந்து, 3.2 கிலோ மெத் ஆம் பெட்டமைன் என்ற போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதன் மதிப்பு, 3.50 கோடி ரூபாய். கைதான இருவர் மீதும், போதை பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement