வெள்ளி இனி 'ஏழைகளின் தங்கம்' அல்ல!
கடந்த காலங்களில் தங்கம் வாங்க முடியாதவர்களுக்கு ஒரு சிறந்த மாற்றாக வெள்ளி இருந்தது. ஆனால், இப்போது அந்த நிலை மாறி வருகிறது. திருமணங்கள் மற்றும் விசேஷங்களில் தாராளமாக பயன்படுத்தப்பட்ட வெள்ளி, இப்போது ஒரு விலைமதிப்புள்ள முதலீடாக மாறியுள்ளது.
கடந்த காலங்களில் ஆபரணங்கள் மற்றும் புகைப்பட பிலிம், ரசாயனங்கள், அச்சடிப்பு டோனரில் மட்டுமே வெள்ளி பயன்படுத்தப்பட்டது. ஆனால், தற்போது சோலார் எனர்ஜி உபகரணங்கள், மின்சார வாகனங்கள், மின்னணு சாதனங்கள் உள்ளிட்ட எதிர்கால தேவை அதிகமுள்ள தொழில்களில் வெள்ளி தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.
குறிப்பாக, கார்பன் உமிழ்வை குறைக்க, உலகம் முழுதும் சோலார் பேனல்கள் அதிகளவு பொருத்தப்பட்டு வரும் நிலையில், ஒரு மெகாவாட் சூரிய மின்சக்தி தயாரிக்கவே பெருமளவு வெள்ளி தேவைப்படுகிறது. உலக நாடுகள் பசுமை ஆற்றலை நோக்கி நகர்வதால், வெள்ளிக்கான தேவை அடுத்த 10 ஆண்டுகளுக்கு குறைய வாய்ப்பில்லை.
கடந்த சில ஆண்டுகளாகவே வெள்ளியின் தேவை அதிகரித்து வரும் நிலையில், சுரங்கங்களில் இருந்து கிடைக்கும் வெள்ளித்தாது, தேவையை ஈடுகட்டவில்லை. குறிப்பாக, சர்வதேச அளவில், தங்கம், செம்பு, ஈயம் போன்ற உலோகங்களுக்காக சுரங்கத்தில் கிடைக்கும் தாதுக்களை சுத்திகரிக்கும் போது கிடைக்கும் துணை பொருளாகவே 70 முதல் 80 சதவீதம் அளவிற்கு வெள்ளி கிடைக்கிறது.
மற்ற உலோகங்களின் உற்பத்தி குறையும்போது வெள்ளி உற்பத்தியும் குறையும். எனவே, தேவை - வினியோக இடைவெளி விலை உயர்வுக்கு முக்கிய காரணம்.
முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை:
2020ல் ஒரு அவுன்ஸ் தங்கத்துக்கு ஈடாக வெள்ளியின் மதிப்பு 125 அவுன்ஸ் என்றிருந்தது. ஆனால், தற்போது அது 58 அவுன்ஸாக குறைந்துள்ளது. இது தங்கத்தை விட வெள்ளியின் விலை உயரும் விகிதம் உயர்ந்து வருவதை காட்டுகிறது. எனவே, கடந்த 2025ல் சந்தித்த பெரிய வளர்ச்சிபோல், நடப்பாண்டில் அவ்வளவு எளிதாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.
வெள்ளியின் விலை அதிரடியான மாற்றங்களை சந்திக்கும் என்பதால், விலை உச்சத்தில் இருக்கும்போது வாங்குவதை விட, சரிவுகளை பயன்படுத்தி முதலீடு செய்வது நல்லது.
கணிப்பு:
எம்.சி.எக்ஸ்., சந்தையில் வெள்ளி விலை ஒரு கிலோ 2,00,000- 2,10,000 என்ற நிலைக்கு சரிந்தால், அது முதலீடு செய்வதற்கு ஏற்ற சரியான விலையாக இருக்கும் என கணிக்கப்படுகிறது. கடன் வட்டி விகித குறைப்பு மற்றும் தொழில்துறை தேவை தொடர்ந்து நீடித்தால், 2026க்கு பிறகும் வெள்ளியின் விலை ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது.
மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி நடந்து இப்போது ஏழைகளே கிடையாது.மேலும்
-
நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
-
விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
-
பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:
-
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது
-
குற்றவாளிகளை பாதுகாக்கிறார்!
-
இந்திய கூட்டணியில் மாற்றம் வருமா: மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்பு