ஆறு மாதங்களில் ரூ.30,700 கோடி அன்னிய முதலீடு

சென்னை, 'தமிழகம், நடப்பு நிதியாண்டின் ஏப்., முதல் செப்., வரை, 30,700 கோடி ரூபாய் மதிப்புள்ள அன்னி ய நேரடி முதலீட்டை ஈர்த்துள்ளது' என, தமிழக அரசின் வழிகாட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் 'எக்ஸ்' தள பதிவு:

தமிழகம், 30,700 கோடி ரூபாய் அன்னிய நேரடி முதலீட்டுடன், இந்தியாவின் முதல் மூன்று மாநிலங்களில் ஒன்றாக திகழ்கிறது. இது, தொழில்நுட்பம் சார்ந்த முதலீடுகளுக்கு விருப்பமான இடமாக வளர்ந்து வரும் வலிமையை பிரதிபலிக்கிறது.

வலுவான உள்கட்டமைப்பு, மின் வாகனம், செமி கண்டக்டர் சூழல் அமைப்பு ஆகியவற்றால் தமிழகம், சர்வதேச முதலீட்டாளர்களை தொடர்ந்து ஈர்த்து, இந்தியாவின் தொழில்நுட்பம் சார்ந்த பொருளாதார மாற்றத்தை முன்னெடுத்து வருகிறது.

Advertisement