வெகுமதி: ஐ.டி.எப்.சி., பர்ஸ்ட் 'டைமண்டு ரிசர்வ்' கிரெடிட் கார்டு

ஐ. டி.எப்.சி., பர்ஸ்ட் வங்கி, சர்வதேச பயணங்களுக்கான 'டைமண்டு ரிசர்வ்' கிரெடிட் கார்டை அறிமுகம் செய்துள்ளது.

இதில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டு பரிவர்த்தனைகளுக்கும், இணையவழி செலவுகளுக்கும் செலாவணி பரிமாற்ற கட்டணம் ஏதும் இல்லை என்பது சிறப்பம்சம்.

பயண ரத்து, உடைமை இழப்பு மற்றும் விபத்துகளுக்கு இதில் காப்பீடு உண்டு.

விமான நிலைய லவுஞ்ச் எனப்படும் காத்திருப்பு வளாக அணுகல் வசதி, கோல்ப் விளையாட அனுமதி, விமானம் மற்றும் ஹோட்டல் முன்பதிவுக்கு காலாவதி இல்லாத ரிவார்டு புள்ளிகள் இதில் உண்டு. ஆண்டு கட்டணம் 3,000 ரூபாய் ஆகும்.

Advertisement