டெக்னிக்கல் அனாலிசிஸ் : சந்தை இறங்கினால் 25,950ல் ஆதரவு கிடைக்கலாம்
நிப்டி
நாளில் ஒரே ஒரு முறை சிறிய ஏற்றம் கண்ட நிப்டி, பின்னர் நாள் முழுவதுமே இறக்கத்தை சந்தித்து நாளின் இறுதியில் 71 புள்ளிகள் இறக்கத்துடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16ல் 1 குறியீடு ஏற்றத்துடனும் 15 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன
இவற்றில் நிப்டி ஸ்மால்கேப்50 குறியீடு அதிகபட்சமாக 0.12 சதவீத ஏற்றத்துடனும், நிப்டி
மைக்ரோ கேப் 250 குறியீடு அதிகபட்சமாக 0.67 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன. 19 துறை சார்ந்த குறியீடுகளில் 13 குறியீடுகள் ஏற்றத்துடனும் 6 குறியீடுகள் இறக்கத்துடனும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி ஹெல்த்கேர் குறியீடு அதிக பட்சமாக 1.85 சதவிகித ஏற்றத்துடனும் நிப்டி ஆயில் & கேஸ் குறியீடு அதிகபட்சமாக 1.75 சதவிகித இறக்கத்துடனும் நிறைவடைந்தது.
வர்த்தகம் நடந்த 3,237 பங்குகளில் 1,238 ஏற்றத்துடனும், 1,889 இறக்கத்துடனும், 110 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. ஏற்றம் தொடர வாய்ப்பு உள்ள போதிலும் மொமென்டம் குறைவாக இருக்கிறது. எனவே, பெரிய மாற்றமின்றி நடப்பதற்கோ அல்லது சிறிய ஏற்றம் வருவதற்கோ இசைவான சூழல் நிலவுவதையே டெக்னிக்கல் காட்டுகிறது. இருப்பினும் 26,300 என்ற லெவலுக்கு மேலே சென்றால் ஏற்றம் தொடர வாய்ப்புள்ளது. இறங்கினால் 25,950 26,000 என்ற லெவல்களில் ஸ்திரமான சர்ப்போர்ட் கிடைக்க வாய்ப்புள்ளது.
மேலும்
-
ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அமைப்பதில் இளைஞர்கள் ஆர்வம்: பிரதமர் மோடி
-
கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர் மஹா. உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி!
-
வளம் மிக்க துறைகளை காங்கிரஸ் தேடிப்போவதில்லை; மாணிக்கம் தாகூர் சொல்லாமல் விட்டது இதுதான்!
-
ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் 10ம் ஆண்டு நிறைவு விழா; பிரதமர் மோடி பங்கேற்பு
-
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான தாக்குதல்; பிரிட்டன் பார்லியில் எம்பி காட்டம்
-
பண்டிகை நாளிலும் போராட்டம்; சென்னையில் 22வது நாளாக போராடிய ஆசிரியர்கள் கைது