பங்குச்சந்தை தரவுகளை வெளியிட செபி புதிய கெடு

சந்தை புள்ளி விபரங்களை தவறாக பயன்படுத்துவதை தடுக்கும் அதேநேரம், முதலீட்டு கல்விக்கான தகவல் வழங்குவதை தொடரும் வகையில், பங்கு விலை தரவுகள் வெளியாவதற்கு காலக் கெடுவை செபி நிர்ணயிக்க திட்டமிட்டுள்ளது.

இதன்படி, வர்த்தக நாளில் இருந்து 30 நாளுக்கு பிறகே, பங்குச்சந்தைகள், பங்கு விலை தரவுகள் பகிரப்படவோ, கல்வி நோக்கில் பயன்படுத்தப்படவோ வேண்டும் என அறிவிக்க உள்ளது.

கடந்த மே 2024ல் செபி வெளியிட்ட உத்தரவில், பங்குச்சந்தைகள் பங்கு விலை தரவுகளை ஒருநாள் கழித்து, வர்த்தகம் மற்றும் முதலீட்டு கல்வி திட்டங்களுக்கு வழங்கலாம் என கூறியிருந்தது. பின்னர், ஜனவரி 2025ல், அதுபோன்ற தரவுகளை வர்த்தக தினத்தில் இருந்து மூன்று மாதங்கள் கழித்தே, முதலீட்டு கல்வி வழங்கும் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு வழங்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில், பங்குச்சந்தை தகவல்களை தவறாக பயன்படுத்துவதை தடுத்தல் மற்றும் முதலீட்டு கல்விக்கு தரவுகளை வழங்குதல் ஆகிய இரண்டுக்கும் இடையே சமநிலையை ஏற்படுத்தும் நோக்கில், ஒரு மாதம் கழித்து தரவுகளை வெளியிடலாம் என அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

Advertisement