7 லட்சம் ஆண்டாக அசையாத ஈரான் எரிமலை உயிர்பெற்றது
டெஹ்ரான்: ஈரானில், 7 லட்சம் ஆண்டுகளுக்கும் மேலாக எந்த அசைவும் இல்லாமல், 'அழிந்துவிட்டது' என கருதப்பட்டு வந்த தப்தான் எரிமலை, தற்போது திடீரென செயல்பாட்டில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மேற்காசிய நாடான ஈரான் மற்றும் நம் அண்டை நாடான பாகிஸ்தான் எல்லை அருகே அமைந்துள்ள தப்தான் எரிமலை, 13,000 அடி உயரமுடையது.
கடந்த, 2023 ஜூலை முதல் 2024 மே வரையிலான 10 மாதங்களில் இந்த எரிமலையின் உச்சிப்
பகுதி, 9 செ.மீ., உயர்ந்துள்ளது தெரிய வந்துள்ளது.
ஐரோப்பிய விண்வெளி நிறுவனத்தின் 'சென்டினல்--1' செயற்கைக்கோள் எடுத்த படங்களில்
இது கண்டுபிடிக்கப்பட்டது.
எரிமலையின் ஆழத்தில் சூடான திரவங்கள், வாயுக்கள் குவிவதால் இந்த மாற்றம் ஏற்பட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
கடந்த, 7 லட்சம் ஆண்டுகளாக செயல்பாடற்று கிடந்த இந்த எரிமலை முன்னதாக 'அழிந்த எரிமலை' என வகைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அது 'உறங்கும் எரிமலை' என மறுவகைப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்டவனின் அற்புதங்களில் ஒன்று என்று சொல்லாம இருக்கணும்
சொன்னாலும் சொல்லாவிட்டாலும் இறைவனின் அற்புதங்களில் இதுவும் ஒன்றுமேலும்
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தின் 2ம் கட்ட நடவடிக்கை; காசா அமைதி வாரியம் அமைத்தார் அதிபர் டிரம்ப்
-
உதயநிதி வருகை தாமதம்; ஒன்றரை மணிநேரம் தாமதமாக துவங்கியது பாலமேடு ஜல்லிக்கட்டு
-
மாட்டுப்பொங்கலுக்கு பயன்படுத்தும் அலங்கார பொருட்கள் விற்பனை 'ஜோர்'
-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சமத்துவ பொங்கல்
-
போச்சம்பள்ளியில் வாகன நெரிசல்
-
'மஞ்சப்பை'யுடன் பானை வடிவில் நின்று மாணவியர் பொங்கல் கொண்டாட்டம்