'அடிக்கடி கட்சி மாறியதால் உளறல்!'

ராமநாதபுரம் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து, அ.தி.மு.க., அமைப்பு செயலர் ராஜன் செல்லப்பா தலைமையில், ராமநாதபுரத்தில் சமீபத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாவட்டச் செயலர் முனியசாமி பேசியபோது, 'தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, கொலை, போதை பொருட்கள் அதிகரிப்பால் மக்கள் அவதிப்படுகின்றனர்.

'வரும் சட்டசபை தேர்தலில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டசபை தொகுதிகளிலும், அ.தி.மு.க., வெற்றி பெற்று, நம் பொதுச்செயலர் பழனிசாமி முதல்வராவார்' என, உணர்ச்சி பொங்க பேசினார். கூட்டத்தில் இருந்த நிர்வாகி ஒருவர் உணர்ச்சிவசப்பட்டு, 'தளபதி, தி.மு.க.,' என கோஷமிடவே, அங்கு சலசலப்பு எழுந்தது.

மேடையின் கீழ் இருந்த தொண்டர் ஒருவர், 'அவர், தி.மு.க.,வில் இருந்து வந்திருப்பார் போல தெரியுது... ஒரே கட்சியில் இருக்கணும்; ஒவ்வொரு கட்சியா மாறினால் இப்படித் தான் உளறணும்' என கூற, சக தொண்டர்கள் சிரித்தனர்.

Advertisement