விற்பனை கூடத்தில் கொப்பரை ஏலம் கிலோ ரூ.189க்கு விற்பனை
உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் நடந்த தேங்காய் ஏலத்தில், கிலோ ரூ.54 க்கு விற்பனையானது.
மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில், இ-நாம் திட்டத்தின் கீழ் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது.
மடத்துக்குளம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களில் உள்ள விவசாயிகள், தேங்காய், கொப்பரை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.
நேற்று நடந்த ஏலத்திற்கு, 703 கிலோ எடையுள்ள, 1,900 தேங்காய்களை, 9 விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர்.
ஏலத்தில், 8 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக, ரூ. 54 க்கும், குறைந்த பட்சமாக, ரூ.38 என சராசரியாக, ரூ.50க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 36 ஆயிரத்து, 475 ஆகும்.
கொப்பரை அதே போல், தேங்காய் பருப்பு ஏலத்திற்கு, 21 விவசாயிகள், 55 மூட்டை அளவுள்ள, 2,191 கிலோ கொப்பரை கொண்டு வந்திருந்தனர். இதில், 8 வியாபாரிகள் பங்கேற்று, தரத்திற்கு ஏற்ப, அதிக பட்சமாக, கிலோ ரூ.189க்கும், குறைந்த பட்ச விலையாக, ரூ.139 என, சராசரியாக, ரூ.161க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, 3 லட்சத்து, 51 ஆயிரத்து, 11 ஆகும்.
மேலும், 5 மூட்டை அளவுள்ள, 121 கிலோ, தேங்காய் தொட்டியை, 2 விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இ-நாம் ஏலத்தில், 8 வியாபாரிகள் பங்கேற்ற நிலையில், ஒரு கிலோ தேங்காய தொட்டி, ரூ.30.30க்கு விற்பனையானது. இதன் மதிப்பு, ரூ.3 ஆயிரத்து, 660 ஆகும்.
விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருட்களுக்கு உரிய தொகை, அவர்களது வங்கிக்கணக்கில் உடனடியாக வரவு வைக்கப்படுகிறது என ஒழுங்கு முறை விற்பனை கூட அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும்
-
திருச்சியில் மார்ச் 8ல் தி.மு.க., மாநில மாநாடு
-
பா.ஜ., நிர்வாகி மீதான வழக்கு ரத்து
-
'அரசு பஸ்சில் இலவசமாக மனைவியோடும் காதலியோடும் ஆண்கள் ஊர் சுற்றலாம்': அ.தி.மு.க., மாஜி புதுவித விளக்கம்
-
பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துள்ள தமிழக காங்கிரஸ் அறக்கட்டளைக்கு புதிய அறங்காவலர்கள் நியமனம்
-
தேர்தலுக்கு மட்டுமே கூட்டணி; ஆட்சியில் கிடையாது
-
கரூர் சம்பவத்தில் பலியானோர் குடும்பத்துக்கு அறிவித்த நிவாரணத்தை வழங்காத பா.ஜ.,