முருங்கை கிலோ ரூ. 250 தக்காளி 15 கிலோ ரூ. 250
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு தினசரி காய்கறி மார்க்கெட்டில், நேற்று, தக்காளி (15 கிலோ பெட்டி) 250, தேங்காய் (ஒன்று) 30 --- 35; கத்தரிக்காய் கிலோ - 18, முருங்கைக்காய் --- 250, வெண்டைக்காய் --- 40, முள்ளங்கி --- 25, பூசணிக்காய் --- 15, அரசாணிக்காய் --- 12, பாகற்காய் --- 40, புடலை மற்றும் சுரைக்காய் --- 20, பீர்க்கங்காய் --- 55, வெள்ளரிக்காய் --- 10, பீட்ரூட் --- 25, அவரைக்காய் -- 40 மற்றும் பச்சை மிளகாய் -- 75 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
கடந்த வாரத்தைக் காட்டிலும், தற்போது தக்காளி (15 கிலோ பெட்டி) -- 120, தேங்காய் (ஒன்று) 2 முதல் 7 ரூபாய், வெண்டைக்காய் மற்றும் பீர்க்கங்காய் -- 10, அரசாணிக்காய் -- 28, வெள்ளரிக்காய் -- 5 ரூபாய் விலை குறைந்துள்ளது. கத்தரிக்காய் -- 4, முள்ளங்கி மற்றும் சுரைக்காய் -- 10, பச்சை மிளகாய் -- 35 ரூபாய் விலை அதிகரித்துள்ளது.
வியாபாரிகள் கூறுகையில், 'பொங்கல் சீசன் முடிந்தததால், மார்க்கெட்டில் நேற்று காய்கறிகள் வரத்தும் குறைவாக இருந்தது. அதற்கேற்ப விலையும் குறைவாக இருந்தது. தக்காளி பெட்டிக்கு 120 ரூபாய் விலை குறைந்ததால், விவசாயிகள் அதிருப்தி அடைந்தனர். வரும் நாட்களில் தக்காளி விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது,' என்றனர்.
மேலும்
-
ஏ.ஆர்.ரஹ்மான் மீது பாஜவுக்கு கோபமில்லை; கனிமொழிக்கு என்னதான் பிரச்னை: கேட்கிறார் அண்ணாமலை
-
விவசாயிகள் விவகாரத்தில் பின்வாங்கியது ஏன்: திமுக அரசை கேட்கிறார் இபிஎஸ்
-
நியூசிலாந்தில் பயங்கர நிலச்சரிவு; சுற்றுலாப் பயணிகள் மண்ணுக்குள் சிக்கி மாயம்
-
அரசு ஊழியர்களின் மகிழ்ச்சி அதிமுகவுக்கு பிடிக்கவில்லை: முதல்வர் ஸ்டாலின்
-
இன்போசிஸ் நிறுவனர் பெயரில் மோசடி: எச்சரிக்கை விடுத்து வீடியோ வெளியிட்ட சுதா மூர்த்தி
-
தமிழகத்தை போலவே கர்நாடகா சட்டசபையிலும்... உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர் கெலாட்