அரைவேக்காடாக தான்தோன்றித்தனமாக செயல்படுவோர் காங்., தொண்டர்கள் அல்ல: செல்வப்பெருந்தகை

24

சென்னை: ''கூட்டணி விவகாரத்தில், அரை வேக்காடாக, தான்தோன்றித் தனமாக செயல்படுவோர் காங்கிரஸ் தொண்டர்கள் அல்ல' என, தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.



மேலிடம் வழிகாட்டுதல் சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி:
ஆட்சியில் பங்கு வேண்டும் என்ற கருத்தை, மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த கட்சியிடமும் கூட்டணி பேசவில்லை.


தி.மு.க.,விடம் தான் பேசி வருகிறோம் என, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஷோடங்கர் கூறிவிட்டார்.



கருத்து சொல்வதற்கு பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை என, அனைத்து உரிமையும் உள்ள து. அதை எங்கு பேச வேண்டும் என, இருக்கிறது.


எல்லாவற்றையும் ஊடகங்களிடம் பேசிவிட்டால், பின் கூட்டணி கட்சிகள் எதற்கு; எங்களுக்கு எது தேவையோ, அதை கூட்டணி கட்சி தலைவரிடம் நாகரிகமாக கேட்டு பெறுவோம்.


டில்லி மேலிடம், சில வழிகாட்டுதல்களை கொடுத்துள்ளது, அதன் அடிப்படையில் பேசி வருகிறோம். எங்களுக்கு தொகுதி வேண்டும் என்றால், முக்கிய கட்சியான தி.மு.க.,விடம் தான் கூற வேண்டும்.


ஊடகங்களா கூடுதல் தொகுதிகளை பெற்று தரப்போகின்றன; அதிகாரத்தை பெற்றுத்தர போகின்றன.


முதல்வர் மீது வருத்தம் இறுதி ஒப்பந்தம் என்பதை, ஊடகத்திடம் வெளிப்படுத்துவோம். காங்கிரஸ் தொண்டர்கள் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள். தலைமை என்ன சொல்கிறதோ, அதற்கு கட்டுப்பட்டு கூட்டணி கட்சி வெற்றிக்காக செயல்படுபவர்கள். அரைவேக்காடாக, தான்தோன்றித்தனமாக செயல்படுவோர், காங்கிரஸ் தொண்டர்கள் அல்ல. காங்., தொண்டர்கள் தேசியத் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவர்.


அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி மீது ஆயிரம் குற்றச்சாட்டு உள்ளது. அவர் மற்றவர்கள் மீது, ஊழல் குற்றச்சாட்டு சுமத்தலாமா. முதல்வர் மீது எனக்கு ஒரே வருத்தம் தான். பழனிசாமி மற்றும் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்கள் மீது நட வடிக்கை எடுக்காததுதான். இவ்வாறு அவர் கூறினார்.

@block_B@

ஜன., 11ல் உண்ணாவிரதம்

''தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை, பா.ஜ., அரசு சிதைப்பதை எதிர்த்து, ஜன., 11ம் தேதி ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். ஜன., 30ம் தேதி அமைதியான வழியில், உள்ளிருப்பு போராட்டம், வார்டு, வட்டார பகுதிகளில் நடக்கும். ஜன., 31ம் தேதி முதல் பிப்., 6ம்தேதி வரை, கலெக்டர் அலுவலகங்கள் முன்பு, மத்திய அரசை கண்டித்து போராட்டம் நடத்தப்படும். பிப்.,7 முதல் 15ம் தேதி வரை கோரிக்கை பேரணிகளை நடத்த உள்ளோம். தமிழகத்தில் காங்., - எம்.பி., பிரியங்கா பங்கேற்கும் மநாடு, தேதி, இடம் பின்னர் அறிவிக்கப்படும்,'' என, செல்வப் பெருந்தகை தெரிவித்தார்.block_B

Advertisement