காலாவதி மருந்துகளால் செங்குன்றத்தில் ஆபத்து

செ ங்குன்றம், கோனிமேடு அணுகு சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே காலாவதியான மருந்து, மாத்திரை, டானிக் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஊசிகள் கொட்டப்பட்டுள்ளன.

மேலும், இப்பகுதி அருகே வசிக்கும் நரிக்குறவர்கள், இந்த மருந்து மற்றும் ஊசிகளை பல்வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்துவதால் தொற்று ஏற்படும் நிலை உள்ளது. இவற்றை திடக்கழிவு மேலாண்மை கிடங்கில் கையாளாமல், சாலையோரத்தில் கொட்டப்பட்டுள்ளதால் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

சாலையோரம் இரை தேடி வலம் வரும் கால்நடைகளும், அவற்றை உண்ணுவதற்கு வாய்ப்பு அதிகம். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- முனுசாமி, சமூக ஆர்வலர், கோனிமேடு.

Advertisement