திருப்பரங்குன்றம் தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கு அரசியலில் இடமில்லை: நிதின் நபின்

26


புதுடில்லி: ''ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்'' என பாஜவின் புதிய தேசியத் தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்ட நிதின் நபின் கூறினார்.


பாஜவின் தேசியத் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நிதின் நபின் இன்று பாஜ தலைவராக பொறுப்பு ஏற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நட்டா உள்ளிட்டோர் மற்றும் பாஜ நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பிரதமருக்கு நன்றி



தலைவராக பொறுப்பு ஏற்ற பிறகு நிதின் நபின் பேசியதாவது:
உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். என்னைப் போன்ற சாதாரண மனிதனுக்கு இவ்வளவு உயரிய பதவி கிடைப்பதற்கான வாய்ப்பை நீங்கள் வழங்கி உள்ளீர்கள். இதற்காக உங்கள் முன் தலைவணங்குகிறேன். பிரதமருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். நீங்கள் நாட்டிற்கு சேவை செய்வதற்கு அயராது பாடுபடுவதை நாங்கள் சாதாரண தொண்டராக இருந்து கவனித்து வருகிறோம்.


குஜராத்தின் ஆனந்த் பகுதியில் முதல்முறையாக உங்களுடன் சேர்ந்து பங்கேற்ற நிகழ்ச்சி எனக்கு நினைவில் இருக்கிறது. அப்போது தேசிய பொதுச்செயலாளராக இருந்தேன். அனைவரின் குரல்களை நீங்கள் உன்னிப்பாக கேட்பதை கவனித்தேன். நிகழ்ச்சி முடிந்த பிறகு, நீங்கள் எங்களிடம் பேசிய போது, குஜராத்தில் இருந்து இத்தனை பேர் ஏன் வந்திருந்தார்கள் என்பதைப் பற்றி மிகுந்த உணர்ச்சிப்பூ்ரவமாக விளக்கினீர்கள். அந்த நாளில் தான், ஒரு மனிதர் மக்களின் உணர்வுகளுடன் தன்னை இணைத்துக்கொள்ளும்போது தான் அவர் மகத்தானவர் ஆகிறார் என்பதை புரிந்து கொண்டேன்.

பொறுப்பு



இன்றைய தருணம் எனக்கு ஒரு உறுதிப்பாட்டின் தருணம். இன்று நான் பதவி மட்டும் ஏற்கவில்லை. கட்சியின் சித்தாந்தம், மரபுகள் மற்றும் பொறுப்பை நான் ஏற்றுக் கொள்கிறேன். இந்த தருணத்தில் எனது மூத்த நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


@quote@இன்று 140 கோடி இந்தியர்களும் வளர்ந்த இந்தியா என்ற கனவுடன் தங்களை இணைத்துக் கொண்டு, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உழைத்து வருகிறார்கள். இதற்காக நான் பிரதமருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.quote

திருப்பரங்குன்றம் விவகாரம்



சமீபத்தில் தமிழகத்தில் திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவதை எதிர்க்கட்சிகள் தடுத்ததை நாம் பார்த்தோம். இது ஒரு சம்பவம் மட்டும் அல்ல. இன்னும் பல விஷயங்களை எதிர்க்கட்சிகள் செய்வதை பார்த்து வருகிறோம்.

நீதிபதியை பதவி நீக்கம் செய்ய அவர்கள் முயற்சித்தனர். சோமநாதர் பெருமையை பற்றி பேசும் போதும், அதனை திருவிழாவாக பெருமையுடன் கொண்டாடும் போதும் எதிர்க்கட்சிகளுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. இத்தகைய மரபுகளை தடுக்க முயற்சிக்கும் சக்திகளை எதிர்கொள்வது அவசியம் என்று நாங்கள் நம்புகிறோம். ராமர் பாலத்தின் இருப்பை மறுப்பவர்களுக்கும், கார்த்திகை தீபத் திருவிழாவை எதிர்ப்பவர்களுக்கும் அரசியலில் இடம் இல்லை என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

சட்டசபை தேர்தல்



அடுத்த சில மாதங்கிளல் தமிழகம்,அசாம், மேற்கு வங்கம், கேரளா மற்றும் புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் மக்கள் தொகை அமைப்பு குறித்து பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. மாறி வரும் மக்கள்தொகை அமைப்பு அங்குள்ள சூழ்நிலையை மாற்றுவதுடன், நமக்கு சவாலை ஏற்படுத்துகிறது. இருப்பினும், பாஜ தொண்டர்கள் கடினமாக உழைத்து இந்த ஐந்து மாநிலங்களிலும் பாஜவை வெற்றி பெறச் செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு நிதின் நபின் பேசினார்.

Advertisement