'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டம்; வரும் 9ல் துவக்கி வைக்கிறார் முதல்வர்
சென்னை: தமிழகத்தில் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரில் சந்தித்து, அவர்களது கனவுகளை அறியும், 'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் வரும் 9ம் தேதி துவக்கி வைக்க உள்ளார்.
தமிழக அமைச்சரவை கூட்டம் நேற்று முடிந்த பின், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ் அளித்த பேட்டி:
கடந்த நான்கரை ஆண்டுகால தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களால், மற்ற மாநிலங்கள், நாடுகள் உற்றுநோக்கும் அளவுக்கு தமிழகம் வளர்ச்சி அடைந்துள்ளது.
இதுவரை யாரும் செய்யாத வகையில், 'உங்கள் கனவை சொல்லுங்கள்' என்ற புதுமையான திட்டத்தை, திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில், முதல்வர் ஸ்டாலின் வரும் 9ம் தேதி துவக்கி வைக்கிறார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும், ஒவ்வொரு கனவு இருக்கும். தங்கள் மாநிலம், நாடு எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என ஆசைப்படுவர். தமிழகத்தில் 24,000 குடியிருப்புகள், 1.91 கோடி குடும்பங்கள் உள்ளன.
ஒரு குடும்பத்தின் கனவு என்ன என்பதை தெரிந்துகொள்ள, தமிழக அரசு விரும்புகிறது. பயிற்சி பெற்ற 50,000 தன்னார்வலர்கள், வீடு வீடாகச் சென்று, 10 வகையான திட்டங்கள் அடங்கிய படிவத்தை கொடுத்து, எந்தெந்த திட்டங்களில் பயன் பெற்றீர்கள் என கேட்பர். அது மட்டுமல்லாது, அவர்களின் மூன்று கனவுகள் என்ன எனவும் கேட்பர்.
இரண்டு நாட்களுக்கு பின், அவர்களின் வீட்டுக்கு மீண்டும் சென்று, பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று, அந்த விபரங்களை மொபைல்போன் செயலியில் பதிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு எண்ணுடன் கனவு அட்டை வழங்கப்படும். இதில் ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் பெறப்படும்.
குடும்பத்தின் பொதுவான கனவை கேட்பது மட்டுமல்லாது, 15 முதல் 29 வயது வரை உள்ள இளைஞர்களிடம், நான்கு கருத்துகளை கேட்க இருக்கிறோம். மாவட்ட வாரியாக, 15 நிமிட வீடியோ வெளியிட இருக்கிறோம். அதில் எட்டு நிமிடங்கள் தமிழக அளவிலும், ஏழு நிமிடங்கள், அந்த மாவட்டம் சார்ந்து தமிழக அரசு செயல்படுத்திய திட்டங்கள் இருக்கும். 30 நாட்களில் வீடு வீடாகச் சென்று தன்னார்வலர்கள் தகவலைப் பெறுவர்.
வரும் 11ம் தேதி, இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துவிடும். வெளிநாடுவாழ் தமிழர்கள் இணையதளத்தில் அவர்களின் கனவை தெரிவிக்கலாம். எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தி விட்டோம். ஆனாலும் மக்களுக்கு எதிர்பார்ப்பு இருக்கும். அதைக்கேட்டு மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தவே, 'உங்கள் கனவை சொல்லுங்கள்' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 2030ல், தமிழகத்தை 90 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பொருளாதாரம் உள்ள மாநிலமாக உயர்த்த, முதல்வர் ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடைய மக்களின் கருத்துகளை அறியவே இத்திட்டம். இவ்வாறு அவர் கூறினார்.
@block_B@
தமிழக அமைச்சரவை கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில், வரும் 20ம் தேதி, சட்டசபையில் கவர்னர் பேச உள்ள உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது. முதல்வர் அறிவித்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. சேலம் மற்றும் ஈரோட்டில் பட்டா வழங்கவும், நான்கு தொழில் நிறுவனங்கள் தொழில் துவங்கவும் அனுமதி அளிக்கப்பட்டது. உங்கள் கனவை சொல்லுங்கள் திட்டத்தை துவக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது. block_B
கணவரால் கைவிட்ட எனக்கு ரேஷன் கார்டு கொடுக்க மறுக்கிறார்கள் பலமுறை அப்ளை பண்ணியும் எனக்கு ரேஷன் கார்டு கிடைக்கவில்லை. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளது அதை வைத்துக் கொண்ட நான் கஷ்டப்படுகிறேன் எனக்கு ரேஷன் கார்டு வேணும்.
எனக்கு ration கார்டு கிடைக்க வில்லை பல முறை அப்ளை பண்ணியும் கிடைக்க வில்லை. என்னுடைய கணவர் என்னுடன் வாழ வில்லை. நானும் என்னுடைய இரண்டு பெண் குழந்தைகலை வைத்து கஷ்டப்படுகிறேன்.
பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு திட்டத்தோடு குளிர் அதிகமாக உள்ளது அதனால் வுள்ளேன் சொட்டர் கொடுக்கலாம்
எங்களின் கனவு திருட்டு கொள்ளை கூட்ட திராவிடம் இல்லாத இந்தியா.
உங்கள் ஆட்சியின் அலங்கோலங்களால் குழந்தைகள் முதல் பெண்கள், விவசாயிகள், பாட்டாளிகள், துப்புறவு தொழிலாளர்கள்,போக்கு வரத்து, மின் வாரிய ஊழியர்கள் ,அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், செவிலியர்கள் அத்தனை பேர் மொத்தத் தூக்கமும் கெட்டுப் போய் நாலே முக்கால் வருசமாகிறது! இவர்கள் எல்லோரும் ஒழுங்காகத் தூங்கினால்தானே கனவு வரும்? அப்புறம் எதற்கு உங்களது கனவு?
உங்களை வீட்டுக்கு அனுப்பவது என்பதுதான் எங்கள் லட்சியம் ,நிச்சியமாக அது கனவு இல்லை நிசம்
வானிலை மையம் 9 ஆம் தேதி டமில் நாட்டில் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுத்துள்ளது என்பது நினைவுக்கு வந்தது. கூடவே 4000 கோடி பணத்தை கபளீகரம் பண்ணி மழை நீர் வடிகால் கட்டுறேன் னு சொன்னதும் நினைவுக்கு வந்தது.
I am dead against corruption. Why this waste show?
டாஸ்மாக் ஒழிக்கணும். திருட்டு தீயமுக ஒழியனும். தேசியம் வளரனும். இதுவே இப்போதைக்கு எங்களுக்கு கனவு. கேட்டீங்க சொல்லியாச்சு-ஆகுற வழிய பாருங்க
உங்கள் கட்சி மறைந்து விட்டதாக கனவு வந்துள்ளது நிறைவேற்றுங்கள் .மேலும்
-
தமிழக சட்டசபை கூட்டத்தொடர்; உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர்
-
சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு விசாரணை சூடுபிடித்தது; 21 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!
-
பிப்., 7ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு
-
ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு வழக்கு; பழனிசாமி பதிலளிக்க உத்தரவு
-
ஓரங்கட்டப்படும் பழனிமாணிக்கம்; தஞ்சை தி.மு.க.,வில் பரபரப்பு
-
கூட்டணி தர்மத்தின்படியே பா.ஜ., முயற்சி செய்கிறது