சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு விசாரணை சூடுபிடித்தது; 21 இடங்களில் அமலாக்கத்துறை ரெய்டு!
திருவனந்தபுரம்: சபரிமலை தங்கம் திருட்டு வழக்கு தொடர்பாக, தமிழகம், கேரளா, பெங்களூருவில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கேரளாவின் சபரிமலையில் உள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் , இரண்டாயிரத்து பத்தொன்பதில் புனரமைப்பு பணிகள் நடந்தன . கருவறை முன்பிருந்த துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவுகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க கவசங்கள் புதுப்பிக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
தங்கமுலாம் பூசப்பட்டு மீண்டும் அணிவிக்கும்போது , துவார பாலகர் சிலைகளின் தங்க கவசத்தில் இருந்து நான்கு கிலோ தங்கம் மாயமானது தெரியவந்தது . கருவறை கதவுகளில் இருந்தும் தங்கம் திருடப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
11 பேர் கைது
இந்த வழக்கில் பராமரிப்பு பணிக்கு தலைமை தாங்கிய உன்னி கருஷ்ணன் போத்தி, சபரிமலையில் பணியாற்றிய நிர்வாக அதிகாரி முராரி பாபு , செயல் அலுவலர் சுதீஷ்குமார், திருவாபரணம் ஆணையர் பைஜூ, திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு முன்னாள் ஆணையர் மற்றும் தலைவர் வாசு , தேவஸ்வம் போர்டு முன்னாள் தலைவர் பத்ம குமார் , நிர்வாக அதிகாரி ஸ்ரீகுமார், பெல்லாரி ஜுவல்லரி உரிமையாளர் கோவர்தன், தந்திரி கண்டரரு ராஜீவரரு உட்பட 11 பேர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர்.
சோதனை
கேரள உயர் நீதிமன்றத்தின் உத்தரவை அடுத்து , சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று தமிழகம், கேரளா, பெங்களூருவில் மொத்தம் 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
கேரளாவில் உன்னிகிருஷ்ணன் வீடு, திருவனந்தபுரத்தில், தேவசம் வாரியத் தலைமையகம் மற்றும் முன்னாள் தேவசம் வாரியத் தலைவர் பத்மகுமாரின் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சென்னை அம்பத்தூரில் உள்ள தனியார் தங்க முலாம் பூசும் நிறுவனத்திலும் சோதனை நடந்தது. சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் விசாரணை சூடுபிடித்தது.
மேலும்
-
பாஜ தேசிய தலைவராக பொறுப்பேற்றார் நிதின் நபின்; விழாவில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
-
கவர்னரை விமர்சனம் செய்வது முறையல்ல; இபிஎஸ்
-
தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு
-
கவர்னர் ஏன் வெளிநடப்பு செய்தார்: லோக் பவன் அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!
-
மக்கள் நலனில் அக்கறை உள்ளவராக கவர்னர் இருக்கணும்: முதல்வர் ஸ்டாலின்
-
தமிழக சட்டசபை கூட்டத்தொடர்; உரையை வாசிக்காமல் வெளியேறினார் கவர்னர்