பிப்., 7ல் தி.மு.க., இளைஞரணி மாநாடு

சென்னை: விருதுநகரில், துணை முதல்வர் உதயநிதி தலைமையில், தி.மு.க., இளைஞரணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு மாநாடு, பிப்., 7ம் தேதி நடக்கவுள்ளது.

கடந்த டிச., 14ல் திருவண்ணாமலையில் நடந்த வட மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், 91 சட்டசபை தொகுதிகளின் நிர்வாகிகள் உட்பட, ஒரு லட்சத்து, 30,000 பேர் பங்கேற்றனர்.

இதையடுத்து, பிப்., 7ம் தேதி விருதுநகரில் நடக்கவுள்ள தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு மாநாட்டில், முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

Advertisement