காஞ்சிபுரம் சாலையோரம் மண் அகற்றும் பணி துவக்கம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் - வாலாஜாபாத் நான்குவழி சாலையோரம் தேங்கி இருக்கும் மண்ணை, நெடுஞ்சாலை துறையினர் அகற்றி வருகின்றனர்.

வாலாஜாபாத் - வண்டலுார் ஆறுவழி சாலை மற்றும் செங்கல்பட்டு - காஞ்சிபுரம் இடையே, நான்குவழி சாலை உள்ளன.

இச்சாலை வழியாக, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள் காஞ்சிபுரதில் இருந்து வாலாஜாபாத், செங்கல்பட்டு, வண்டலுார், ஒரகடம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர்.

வாகனங்களின் பயன்பாடு அதிகரிப்பு காரணமாக, சாலையோரம் மணல் தேங்கியுள்ளது. இதனால், அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி கவிழும் அபாயம் உள்ளது.

எனவே, சாலையோரம் தேங்கியுள்ள மணலை அகற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் இடையே கோரிக்கை விடுத்தனர்.

இதை ஏற்று, நெடுஞ்சாலை துறையினர் காஞ்சிபுரம் - வாலாஜாபாத் இடையே, சாலை ஓரத்தில் தேங்கி இருக்கும் மண்ணை, பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் அகற்றி வருகின்றனர்.

Advertisement