ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்

7

வாஷிங்டன்: ஈரானில் தற்போது ஆட்சி மாற்றம் மற்றும் புதிய தலைமைக்கான நேரம் வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.



ஈரானில் 37 ஆண்டுகளாக ஆட்சி அதிகாரம் செய்து வரும் கமேனியின் தலைமைக்கு எதிராகவும், விலைவாசி உயர்வு, பொருளாதார நெருக்கடி ஆகியவற்றுக்கு எதிராகவும் மக்கள் வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை வன்முறையாளர்கள் என்று கூறி, அதிபர் கமேனி ஒடுக்கி வருகிறார். கிட்டத்தட்ட 3000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


நாளுக்கு நாள் ஈரானில் நிலைமை கட்டுக்கடங்காமல் இருக்க, ஈரானில் போராட்டம் நீடித்தால் அங்கு அமெரிக்கா ராணுவ நடவடிக்கையை மேற்கொள்ளும் என்று அதிபர் அறிவித்து இருந்தார். தனது கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், இப்போது ஈரானில் புதிய தலைமைக்கான நேரம் வந்துவிட்டது என்று அவர் கூறி உள்ளார்.

டிரம்ப் மேலும் கூறி உள்ளதாவது;

குற்ற உணர்ச்சி உள்ளவராக, ஒரு நாட்டின் தலைவராக இதற்கு முன் இல்லாதவாறு வன்முறை மூலம் நாட்டை அழித்து வருகிறார் கமேனி. நாட்டை தொடர்ந்து இயங்க வைக்க, அமெரிக்காவை நான் வைத்திருப்பது போல, இங்கும் அதை முறையாக நடத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். ஆயிரக்கணக்கான மக்களை கொல்லுதல் கூடாது.

இவ்வாறு டிரம்ப் கூறி உள்ளார்.

Advertisement