டில்லி சென்றார் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ்

21

புதுடில்லி: தேர்தல் நெருங்கி வரும் சூழலில் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் இன்று(ஜன.,07) சென்றார்.


தமிழக சட்டசபைக்கு மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதையொட்டி, அனைத்து அரசியல் கட்சிகளும் முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தை தொடங்கி விட்டன. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்த போது, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி சந்தித்து பேசினார். அமித் ஷாவை இபிஎஸ் சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த சந்திப்பு நடைபெறவில்லை.


இதைத்தொடர்ந்து, இன்று (ஜனவரி 7) இபிஎஸ் ஐ அவரது வீட்டிற்கு சென்று சந்தித்த பாமக தலைவர் அன்புமணி, அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார். பாமகவுக்கான தொகுதி பங்கீடு முடிவடைந்து விட்டதாகவும், இது தொடர்பான அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


பாமக உடனான கூட்டணியை உறுதியை செய்த இபிஎஸ், இன்று டில்லிக்கு புறப்பட்டு சென்றடைந்தார். விமான நிலையத்தில் அவரை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், எம்பி தனபால் மற்றும் வழக்கறிஞர் பிரிவை சேர்ந்தவர்கள் வரவேற்றனர்.


ஏற்கனவே, அதிமுக முன்னாள் அமைச்சர் வேலுமணி டில்லியில் முகாமிட்டுள்ளார். டில்லியில், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேச இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது, பாஜவுக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

Advertisement