சத்தீஸ்கரில் நக்சல்கள் 26 பேர் சரண்!
ராய்ப்பூர்: சத்தீஸ்கர், சுக்மா மாவட்டத்தில், நக்சலைட்டுகள் 26 பேர் சரணடைந்தனர்.
சத்தீஸ்கர், தெலுங்கானா, மஹாராஷ்டிரா, மத்திய பிரதேச மாநிலங்களில் ஒரு காலத்தில் நக்சல் ஆதிக்கம் மிகுந்து காணப்பட்டது. இதை ஒடுக்கும் வகையில் மத்திய - மாநில அரசுகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. நாடு முழுவதும் மார்ச் மாதத்திற்குள் நக்சல் இயக்கத்தை முற்றிலும் அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் 26 பேர் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைந்தனர். இதில் பல்வேறு குற்றச்செயல்களில் தேடப்பட்ட 13 பேர் பற்றி தகவல் அளிப்போருக்கு 65 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
நக்சல் அமைப்புகளின் உயர்மட்ட தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்பட்டு வரும் சூழலில், சத்தீஸ்கர், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் ஏராளமான நக்சல்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்து வருகின்றனர். இதனால், நக்சல்களை அழிக்கும் நடவடிக்கை இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
அமித் ஷா போன்ற ஒருவர் தமிழக முதல்வர் ஆகணும் .....
அண்ணாமலை வந்தாலே கிரிமினல்கள் தேச துரோகிகள் பிரிவினைவாதிகள் உச்சா போய் விடுவானுங்க .மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை