அன்புமணியுடனான கூட்டணி வெற்றிக்கான அச்சாரம்; இபிஎஸ் மகிழ்ச்சி

19

சென்னை; சட்டசபை தேர்தலில் அன்புமணியுடனான கூட்டணி வெற்றிக்கான அச்சாரம் என்று அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.



சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் கூட்டணியை பலப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கி உள்ளன.திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தாலும் தவெகவுடன் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.


இந் நிலையில் பாமக தலைவர் அன்புமணி, அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ்சை சந்தித்தார். பின்னர் அதிமுக கூட்டணியில் பாமக இணைந்து போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக இபிஎஸ் அறிவித்தார். இந்த சந்திப்பு குறித்து அவர் தமது எக்ஸ் பதிவில் கூறி உள்ளதாவது;


அதிமுக - பாஜ வெற்றிக் கூட்டணியில் இணைந்துள்ள பாமகவை மகிழ்ச்சியோடு வரவேற்கிறோம்.


அதிமுக- பாமக இயற்கையான கூட்டணி; தமிழக மக்களின் எண்ணங்களை அறிந்து செயல்படும் கூட்டணி. அந்த அடிப்படையில், இன்றைய தினம், நானும், அன்புமணியும் சந்தித்து நம் வெற்றிக் கூட்டணிக்கான அச்சாரமிட்டோம்.


மக்கள் விரோத விடியா திமுக ஆட்சியை அகற்றி, தமிழக மக்களின் ஒருமித்த எண்ணப்படி 2026ல் அதிமுக நல்லாட்சியினை அமைப்போம்.


இவ்வாறு தமது பதிவில் இபிஎஸ் கூறி உள்ளார்.

Advertisement