மஹா.,வில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 5 பேர் கவலைக்கிடம்: 10 பேர் காயம்

புனே: மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே ஓட்டல்ஓன்றில் சமையல் சிலிண்டர் வெடித்த விபத்தில் 10 பேர் காயம் அடைந்தனர் . ஐந்து பேர் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

சம்பவம் குறித்து போலீசார் கூறிஇருப்பதாவது: மகாராஷ்டிரா மாநிலம் புனே அருகே உள்ளஆ தெளண்ட் நகரம். இங்கு இருந்த ஓட்டல் ஒன்றில் சமையல் சிலிண்டர் ஒன்று எதிர்பாராதவிதமாக வெடித்து சிதறியது. இச்சம்பவத்தில் சமையல் இருந்த தொழிலாளர்கள்10 பேர் படுகாயம்அடைந்தனர்.
இவர்கள் அனைவரும் அவசர சிகிச்சைக்காக புனேநகரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இவர்களில் ஐந்துபேரின்நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள்அனைவரும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். மேலும் சிலிண்டர் வெடிப்பு குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என போலீசார் தெரிவித்தனர்.

Advertisement