அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி அ.தி.மு.க., மனு
சென்னை: தி.மு.க.,வைச் சேர்ந்த அமைச்சர் நேருவுக்கு எதிராக, அமலாக்கத்துறை எழுதிய கடிதம் அடிப் படையில், வழக்குப்பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிடக் கோரி, அ.தி.மு.க., - எம்.பி., இன்பதுரை, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், கடந்த 2024 - -25ம் ஆண்டுகளில், உதவி, இளநிலைப் பொறியாளர், சுகாதார ஆய்வாளர் உட்பட, 2,538 பணியிடங்களுக்கு, நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
ஒரு பதவிக்கு 25 லட்சம் முதல் 35 லட்சம் ரூபாய் வரை என, மொத்தம் 634 கோடி ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டுள்ளதாக கூறி, இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யும்படி, தமிழக டி.ஜி.பி.,க்கு, அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது.
அந்த ஆதாரங்களின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யும்படி, அ.தி.மு.க., - எம்.பி. இன்பதுரை, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேருவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய, லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்பதுரை மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், 'ஊழல் எப்படி நிகழ்ந்தது என்பது தொடர்பாக, அமலாக்கத்துறை ஆவணங்களுடன் கூறியுள்ளது. அதன் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யும்படி புகார் அளித்தும், லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை.
'எனவே, அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்து, நியாயமான முறையில் குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணை நடத்தி முடிக்க வேண்டும்' என குறிப்பிட்டுள்ளார்.
இவனைப்போன்ற தேசதுரோகிகளை இன்னும் பதவியில் விட்டுவைத்திருப்பது - நமது நீதித்துறையின் மெத்தனத்தை காட்டுகிறது. இவர்மீது சென்னை HC வழக்கு பதியவைத்து இவர ஜெயிலுக்கு அனுப்பனும்
நேருவின் பெயரை கெடுக்க முயல்கிறார்கள் என்று காங்கிரஸ் கூட வந்து மனுக்கொடுக்கும். ஊழலுக்கு ஸ்டாலின் நெருப்பு போன்றவர் என்பதற்கு இது நல்ல உதாரணம்.மேலும்
-
அழிப்போரை விட உருவாக்குவோருக்கே வலிமை அதிகம்: அமித் ஷா
-
டில்லி எதிர்க்கட்சி தலைவர் ஆதிஷி சிங் 19க்குள் விளக்கம் அளிக்க உத்தரவு
-
குளிர் அலை தணிந்து வெப்பநிலை அதிகரிப்பு: டில்லி மக்கள் நிம்மதி பெருமூச்சு
-
அடுத்தடுத்து விழும் தடையால் த.வெ.க., விஜய் 'அப்செட்'
-
பா.ஜ.,வின் புதிய தேசிய தலைவர் யார்?: வரும் 20ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
-
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது தாக்குதல்: பிரிட்டன் பார்லி., கண்டனம்