ரூ.50,000 கோடிக்கு ஐ.பி.ஓ., ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தயார்
கடந்த ஆண்டை போலவே, நடப்பாண்டிலும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வெளியிட்டு கிட்டத்தட்ட 50,000 கோடி ரூபாய் நிதி திரட்ட தயாராகி வருகின்றன.
கடந்த 2025ல் மீஷோ, லென்ஸ்கார்ட், குரோ, பிசிக்ஸ் வாலா போன்ற நிறுவனங்கள் ஐ.பி.ஓ., வாயிலாக 36,000 கோடி ரூபாய் திரட்டின.
இந்நிலையில், நடப்பாண்டில் போன்பே, செப்டோ, ஓயோ, போட், இன்ப்ரா மார்க்கெட், ஷேடோபாக்ஸ் உள்ளிட்ட பல நிறுவனங்கள் புதிய பங்கு வெளியிட வரிசை கட்டி நிற்கின்றன.
ரிலையன்ஸ் ஜியோ, எஸ்.பி.ஐ., மியூச்சுவல் பண்ட்ஸ் போன்ற மிகப்பெரிய நிறுவனங்களின் ஐ.பி.ஓ.,க்களும் வர உள்ளதால், அவை அதிகப்படியான முதலீட்டை ஈர்க்கக்கூடும் என கூறும் நிபுணர்கள், இது, மற்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு கிடைக்கும் முதலீட்டில் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.
* ஐ.பி.ஓ.,வெளியிடும் நிறுவனத்தின் மதிப்பு அதிகமாக இல்லாமல், முதலீட்டாளர்களுக்கு லாபம் தரும் வகையில் இருக்க வேண்டும்
* பிப்ரவரி மாத மத்திய பட்ஜெட் மற்றும் சர்வதேச சந்தை மாற்றங்கள் ஐ.பி.ஓ., சந்தையின் வேகத்தை தீர்மானிக்கும் என நிபுணர்கள் கருத்து.
மேலும்
-
நீரிழிவு நோய் பாதிப்பில் இந்தியாவுக்கு 2ம் இடம்
-
விமானத்தை இயக்க மறுத்த பைலட், ஊழியர்களுடன் பயணியர் மோதல்
-
பார்லி., விசாரணை குழுவுக்கு எதிரான நீதிபதி யஷ்வந்த் வர்மா மனு தள்ளுபடி பணமூட்டை விவகாரம்:
-
மஹாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில், பா.ஜ. கூட்டணி அபாரம்! : தாக்கரே ஆதிக்கம் முடிந்தது
-
குற்றவாளிகளை பாதுகாக்கிறார்!
-
இந்திய கூட்டணியில் மாற்றம் வருமா: மூன்றாவது போட்டியில் எதிர்பார்ப்பு