டெக்னிக்கல் அனாலிசிஸ்: நிப்டி பலவீனம் அடைவதற்கான அளவுகோல் எது?
நிப்டி
காலையில் இருந்தே இறக்கத்தை சந்தித்த நிப்டி, மதியம் அடுத்தகட்ட இறக்கத்தை சந்தித்து, பின்னர் மீண்டும் நாளின் இறுதியில், 37 புள்ளிகள் சரிவுடன் நிறைவடைந்தது. பரந்த சந்தை குறியீடுகள் 16ல் 14 குறியீடுகள் ஏற்றத்துடனும் 1 குறியீடு இறக்கத்துடனும் 1 குறியீடு மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில், நிப்டி ஸ்மால்கேப் 50 குறியீடு அதிகபட்சமாக 0.79 சதவீத ஏற்றத்துடனும் நிப்டி100 குறியீடு 0.10 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
19 துறை சார்ந்த குறியீடுகளில் 10 குறியீடுகள் ஏற்றத்துடனும் 7 குறியீடுகள் இறக்கத்துடனும் 2 குறியீடுகள் மாற்றம் ஏதுமின்றியும் நிறைவடைந்தன. இவற்றில் நிப்டி மிட்ஸ்மால் ஐடி & டெலிகாம் குறியீடு அதிகபட்சமாக 2.37 சதவீத ஏற்றத்துடனும் நிப்டி ஆட்டோ குறியீடு அதிகபட்சமாக 0.80 சதவீத இறக்கத்துடனும் நிறைவடைந்தன.
வர்த்தகம் நடந்த 3,246 பங்குகளில் 1,578 ஏற்றத்துடனும், 1,550 இறக்கத்துடனும், 118 மாற்றம் ஏதும் இன்றியும் நிறைவடைந்திருந்தன. நிப்டி 25,900 என்ற லெவலுக்கு மேலே இருக்கும் வரை பெரிய இறக்கத்திற்கான வாய்ப்பு குறைவே. ஒரு வேளை இதை தாண்டி இறங்கினாலும் 25,700-வரை சென்று திரும்ப வாய்ப்புள்ளது. 25,700க்கு கீழே சென்றால் மட்டுமே, நிப்டி பலவீனமடைகிறது என்று கொள்ளலாம்.