விஷம் வைத்து கொல்லப்பட்ட ஆடுகள்

கீழக்கரை: ஏர்வாடி அருகே நாச்சம்மைபுரத்தைச் சேர்ந்தவர் விவசாயி கவியரசன். இவருக்கு சொந்தமான 13 வெள்ளாடுகளை மர்ம நபர்கள் விஷம் வைத்து கொன்றுள்ளனர்.

நேற்று வழக்கம் போல் ஆடுகள் நாச்சம்மைபுரம் அருகே இரை தேடுவதற்காக வயல்வெளிக்கு சென்றுள்ளன.

நேற்று மதியம் 3:00 மணிக்கு உணவில் மர்ம நபர்கள் விஷம் வைத்து ஆடுகளுக்கு வழங்கி உள்ளனர்.

அவற்றை சாப்பிட்ட ஆடுகள் சிறிது நேரத்தில் துடி துடித்து இறந்தன. சம்பவம் குறித்து விவசாயி கவியரசன் ஏர்வாடி தர்கா போலீசில் புகார் அளித்தார். போலீசார் ஆட்டுக்கு விஷம் வைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement