பணிக்கு சேர்ந்த முதல் நாளே பணத்துடன் ஊழியர் ஓட்டம்

வேளச்சேரி: வேளச்சேரியில் உள்ள பெட்ரோல் 'பங்க்'கில் பணிக்கு சேர்ந்த அன்றே, வசூலான 34,500 ரூபாயுடன் ஓடிய ஊழியரை, போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் மாரியப்பன், 40. இவர், கடந்த 8ம் தேதி, வேளச்சேரி விரைவு சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் பணிக்கு சேர்ந்தார். மூன்று மணி நேரம் மட்டுமே பணிபுரிந்த அவர், டீ குடித்து வருவதாக சென்றவர், மீண்டும் பணிக்கு திரும்பவில்லை. வசூலான 34,500 ரூபாயுடன் மாயமானார்.

'பங்க்' மேலாளர் காளியப்பன் புகாரையடுத்து, வேளச்சேரி போலீசார் விசாரித்து, செங்கல்பட்டில் அவரது வீட்டில் வைத்து, நேற்று அவரை கைது செய்தனர்.

Advertisement