பொங்கல் அங்காடி வில்லியனுாரில் திறப்பு
வில்லியனுார், ஜன. 11- வில்லியனுாரில் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் பொங்கல் அங்காடி மற்றும் கிராம சந்தையை பி.டி.ஓ., திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வில்லியனுார் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் மகளிர் சுய உதவிக் குழுவினரின் உற்பத்தி பொருட்களை நுகர்வோர்களிடம் நேரடியாக விற்பனை செய்யும் வகையில் வில்லியனுார் லட்சுமி திருமண நிலையத்தில் பொங்கல் அங்காடி மற்றும் கிராம சந்தை திறப்பு விழா நடந்தது. விழாவிற்கு வட்டார வளர்ச்சி அதிகாரி தயானந்த் டெண்டுல்கர் தலைமை தாங்கி அங்காடியை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் துணை வட்டார வளர்ச்சி அதிகாரி கலைமதி, திட்ட இணைப்பு அதிகாரி சந்தமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த அங்காடி வரும் 13ம் தேதி மாலை வரை செயல்படும். சந்தையில் மண்பானைகள், பொங்கல் பொருட்கள், அழகுசாதனப் பொருட்கள், பலகார மாவு வகைகள், ஒயர் கூடைகள், மரசாமான்கள், கைவினைப் பொருட்கள், மூலிகை மற்றும் மலர் செடிகள், தேன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனைக்கு வைத்துள்ளனர்.
மேலும்
-
திமுக இந்த போகிப் பண்டிகையோடு அகற்றப்படணும்: அண்ணாமலை வலியுறுத்தல்
-
அமெரிக்க பொருளாதாரம் செழித்து வளர்கிறது; அதிபர் டிரம்ப் தம்பட்டம்
-
அபரிமிதமான செழிப்பு, வெற்றி கிடைக்கட்டும்; பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து
-
தங்கம் விலை சவரனுக்கு ரூ.880 உயர்வு: வெள்ளி விலையும் புதிய உச்சம்
-
ஈரானில் தொடரும் போராட்டம்: பலி 2,571 ஆக அதிகரிப்பு
-
பொங்கலோ பொங்கல்; தமிழில் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாழ்த்து