உணவு பாதுகாப்புத்துறை ஆய்வு செய்ய வேண்டுகோள்

பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் பகுதியில் செயல்படும் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்-துள்ளனர்.


பள்ளிப்பாளையம் பகுதி கூலித்தொழிலாளர்கள் நிறைந்த பகுதி-யாகும். அவர்களை நம்பியே ஏராளமான டீ கடை, பேக்கரி, ஓட்-டல்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒரு சில தவிர, பெரும்-பாலானவற்றில் கலப்படம் கலந்த டீ துாள் மற்றும் உணவு பொருட்கள் பயன்படுத்துகின்றனர். மேலும், பேக்கரியில் காலாவதியான பொருட்கள் விற்-பனை செய்கின்றனர். இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்-றனர். எனவே, உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு செய்து, விதிமீறி செயல்படுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement