ஈத்கா மைதானம் திறப்பு
திருச்செங்கோடு: திருச்செங்கோடு-சங்ககிரி ரோட்டில், திப்புசுல்தான் காலத்திய ஈத்கா மைதானம் உள்ளது. இந்த மைதானத்தில், ரம்ஜான், பக்ரீத் பண்டிகையின்போது இஸ்லாமியர்கள் ஒன்று திரண்டு தொழுகை நடத்துவது வழக்கம். இந்த ஈத்கா மைதானத்தை சுற்றிலும் சுற்றுச்-சுவர் இல்லாமல், தரைத்தளம் சரியில்லாத அமைப்பிலும் இருந்-தது. இந்நிலையில், ஈத்கா மைதானத்தை தனியார் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சீரமைத்து கொடுத்தனர்.
சீரமைக்கப்பட்ட ஈத்கா மைதான திறப்பு விழா, நேற்று நடந்-தது. திருச்செங்கோடு தொகுதி, கொ.ம.தே.க., - எம்.எல்.ஏ., ஈஸ்வரன் நுழைவு வாயிலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். ஈத்கா மினாராவை, தி.மு.க., வக்பு வாரிய உறுப்பினர் சுபேர்கான் திறந்து வைத்தார். கல்வெட்டை, நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளர் மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திருச்செங்-கோடு மேற்கு நகர செயலாளர் நடேசன், கிழக்கு நகர செயலாளர் கார்த்திகேயன், மேற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி செயலாளர் சுரேஷ்பாபு, முத்தவல்லி ராஜா முகமது உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை