கொல்லிமலையில் வாட்டி எடுக்கும் குளிர்

சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அடுத்துள்ள மலை வாசஸ்தலமான கொல்லிம-லைக்கு, தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கொல்லி மலை அடிவார பகுதியான காரவள்ளியில் இருந்து, 70 கொண்டை ஊசி வளைவுகளை கடந்து சென்றால், இயற்கை எழில் கொஞ்சும் கொல்லிமலையை அடையலாம். பெரும்பா-லான சுற்றுலா பயணிகள் டூவீலரில் செல்வதற்கு முன்னுரிமை கொடுப்பது வழக்கம்.


இந்நிலையில், சில நாட்களாக கொல்லிமலையில் கடும் குளிர் வாட்டி எடுக்கிறது. காலை, 10:00 மணி வரை மலைப்பகுதி முழுவதும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் அன்றாட பணிக்கு செல்லும் பொதுமக்கள் கடும் பாதிப்-படைந்து வருகின்றனர். மேலும், கொண்டை ஊசி வளைவில் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டதால் தங்களது வாகனத்தின் முகப்பு விளக்கை எரிய-விட்டபடி சுற்றுலா பயணிகள் செல்கின்றனர்.

Advertisement