பொங்கல் விளையாட்டு போட்டி

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த கேளம்பாக்கம் ஊராட்சி சாத்தங்குப்பம் விரிவாக்கப் பகுதி குடியிருப்போர் நலச்சங்கத்தின் 9ம் ஆண்டு மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடந்தன.

பகுதி மக்கள் இளைஞர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Tamil News
Tamil News

திருப்போரூர் அடுத்த தையூர் ஊராட்சியில், தி.மு.க., சார்பில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் 4,500 க்கும் மேற்பட்டோருக்கு பொங்கல் தொகுப்பை வழங்கினார்.

அப்போது 15 ஆண்டுகளுக்கு முன் தையூர் ஊராட்சியிலிருந்து தாம்பரம் வரை இயக்கப்பட்ட பேருந்து சேவை 10 ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டதை மீண்டும் இயக்க வேண்டும் என, பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

Advertisement