மாமல்லையில் பார்வேட்டை

மாமல்லபுரம்: மாமல்லபுரம் ஸ்தலசயன பெருமாள் கோவிலில் உற்சவர் உலகுய்யநின்ற நாயனார், ஆண்டுதோறும் காணும் பொங்கலன்று, மாமல்லபுரம் அடுத்த, குழிப்பாந்தண்டலம் பகுதியில் அமைந்துள்ள, லட்சுமிநாராயண பெருமாள் கோவிலுக்கு, பார்வேட்டை உலா செல்லும் உற்சவம் நடக்கிறது.

இந்நாளான நேற்று காலை, மார்கழி மாத வழிபாட்டைத் தொடர்ந்து, உற்சவர் அதிகாலை 4:00 மணிக்கு, பார்வேட்டை உலா புறப்பட்டு, மாலை 4:30 மணிக்கு, குழிப்பாந்தண்டலம் அடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டு, இரவு 7:30 மணிக்கு முயல் வேட்டையாடினார்.

Advertisement