நடராஜர் கோவிலில் பொங்கல்  கொண்டாட்டம்

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் காணும் பொங்கலையொட்டி நேற்று சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கோவிலுக்கு வந்த பெண்கள் பல குழுக்களாக பிரிந்து, கும்மி, கோலாட்டம் ஆடி, பாடி மகிழ்ந்தனர். மேலும், கோ-கோ, சிலம்பம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடினர்.

Tamil News
Tamil News
Tamil News

கோவிலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு, வெளிப்பிரகாரம் பொழுது போக்கு மைதானமாக காணப்பட்டது. பொதுமக்கள் கூட்டம் கோவிலில் இரவு 9.00 மணி வரை நீடித்தது. அதேபோல், வல்லம்படுகை, தீர்த்துக்குடி, கருப்பூர், ஜெயங்கொண்டபட்டினம், திட்டுக்காட்டூர், கீழ் குண்டலவாடி மேல குண்டலவாடி, பெராம்பட்டு உள்ளிட்ட கிராமங்களில் இளைஞர்கள், சிறுவர்கள் கூடி கொள்ளிடம் ஆற்றங்கரையில், கபடி, சிலம்பாட்டம், நீளம் தாண்டுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்றனர். தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Advertisement