பழைய பொருட்கள் வாங்க ஆவடியில் 16 மையம் அமைப்பு

ஆவடி: ஆவடி மாநகராட்சி சார்பில், புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட 16 இடங்களில் பழைய பொருட்கள் வாங்கும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்கள் காற்று மாசு ஏற்படாதவாறு 'புகையில்லா போகி' கொண்டாடும் வகையில், ஆவடி மாநகராட்சி சார்பில், பேனர்கள், ஒலிபெருக்கி வாயிலாக பொது அறிவிப்பு உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

பொதுமக்கள், பழைய துணிகள், மரச்சாமான்கள், மறுசுழற்சி பொருட்கள், பிளாஸ்டிக் டயர்கள் உள்ளிட்டவற்றை தீயிலிட்டு எரிக்காமல், மாநகராட்சி சார்பில் நான்கு மண்டலங்களில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில், ஜன., 12 மற்றும் 13ம் தேதிகளில் கொடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement