பொங்கல் தொகுப்பு பொதுமக்கள் அதிருப்தி
பண்ருட்டி: பண்ருட்டி அருகே தி.மு.க. நிர்வாகி பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்கிய விவகாரம் பொதுமக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
கடலுார் மாவட்டம், புதுப்பேட்டை, வேளாண்மை கூட்டுறவு சங்கம் எண் :1.,ல், நேற்று தமிழக அரசின் சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் தொரப்பாடி பேரூர் நகர தி.மு.க.செயலாளர் சுந்தரவடிவேல் தலைமையில் தி.மு.க.கிளை செயலாளர் உள்ளிட்டோர் பொங்கல் பரிசு தொகை, கரும்பு உள்ளிட்ட தொகுப்புகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.
அரசின் திட்டங்களை, மக்கள் பிரதிநிதிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மக்களுக்கு வழங்குவது வழக்கம். ஆனால் தொரப்பாடி பேரூராட்சியில் தி.மு.க., நிர்வாகி வழங்கியதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர். இதற்கு அ.தி.மு.க.உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.