ரூ.244.51 கோடிக்கு பொங்கல் பரிசு அமைச்சர் கணேசன் பெருமிதம்

விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த எம்.பட்டி ஊராட்சியில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் விழா நடந்தது. டி.ஆர்.ஓ., புண்ணியக்கோடி தலைமை தாங்கினார்.

ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் சவிதா, முன்னாள் எம்.எல்.ஏ., கலைச்செல்வன், தாசில்தார் அரவிந்தன் முன்னிலை வகித்தனர். முன்னாள் ஊராட்சித் தலைவர் ஜெகப்பிரியா வசந்தகுமார் வரவேற்றார்.

விழாவில், பச்சரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு, ரொக்கம் 3,000 ரூபாய் உள்ளிட்ட பொங்கல் பரிசுகளை வழங்கி, அமைச்சர் கணேசன் பேசியதாவது:

ஒரு ரேஷன் கார்டுக்கு பொங்கல் பரிசுத் தொகை என 3 ஆயிரத்து 111.549 ரூபாய் வழங்கப்படுகிறது. இதன் மூலம் மாவட்டத்தில் 7 லட்சத்து 85 ஆயிரத்து 994 ரேஷன் கார்டுகளுக்கு 244.51 கோடியும்; மாநிலம் முழுவதும் 2 கோடியே 22 லட்சத்து 91 ஆயிரத்து 710 குடும்பங்களுக்கு 6 ஆயிரத்து 936.17 கோடி ரூபாயும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் கோவிந்தசாமி, வேல்முருகன், நகர செயலாளர் தண்டபாணி, துணை செயலாளர் மணிவேல், காங்., வட்டார தலைவர் ராவணன் உட்பட பலர் பங்கேற்றனர். ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் வசந்தகுமார் நன்றி கூறினார்.

Advertisement