லாரி மோதி விபத்து முதியவர் உயிரிழப்பு
திருவள்ளூர்: ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்தவர் மீது, பின்னால் வந்த லாரி மோதிய விபத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திருவள்ளூர் தேவி நகரைச் சேர்ந்தவர் பெஞ்சமின், 82. திருவள்ளூரில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர், நேற்று முன்தினம் காலை 11:00 மணியளவில், ஆயில் மில் அருகே ஸ்கூட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த லாரி, ஸ்கூட்டர் மீது மோதியது. படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
மேல்சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அன்றிரவு 9:00 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து, திருவள்ளூர் நகர போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்
-
ஆரோக்கியமான இந்தியாவால் தான் வல்லரசு உருவாகும்! துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன்
Advertisement
Advertisement