சத்துணவு, அங்கன்வாடி கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
கரூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கரூரில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்-பாட்டம் நடத்தினர்.
தமிழ்நாடு சத்துணவு அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு, கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் பத்மாவதி தலைமையில், கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்-தது. அதில், சத்துணவு மற்றும் அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள, 60 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, தேசிய மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும். மே மாதம் கோடை விடு-முறை வழங்க வேண்டும், பண்டிகைக்கு வரைய-றுக்கப்பட்ட விடுமுறை வழங்க வேண்டும் உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மாநில செயற்குழு உறுப்பினர் கோகிலா, செய-லாளர் கலா, பொருளாளர் ராணி உள்பட பலர் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement