திருப்பரங்குன்றம் தீபம்; தீர்ப்பும் திமுக அரசும்!
திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்ற எந்த தடையும் இல்லை' என, உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்வோம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. சட்ட அமைச்சர் ரகுபதியோ, “சுடுகாட்டில் தான் பிணத்தை எரிக்கலாம்; கண்ட இடத்தில் எரிக்க கூடாது. அதுபோல, தீபம் ஏற்றவேண்டிய இடத்தில்தான் ஏற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார். இதுபற்றி மக்கள் என்ன நினைக்கின்றனர்?
@quote@தேவையற்ற பிரச்னை
தேர்தல் நெருங்கிவரும் சூழலில், இத்தகைய சர்ச்சைகளை கிளப்புவது சகஜமாகி விட்டது. எந்தவிதப் பிரிவினையும் இன்றி மக்கள் ஒற்றுமையாக வாழ்கின்றனர். எண்ணற்ற பிரச்னைகள் இருக்கும்போது, சிலர் தனிநல ஆதாயத்திற்காக தேவையற்ற பிரச்னைகளை உருவாக்குகின்றனர்.” - உஷா, சரவணம்பட்டிquote
@quote@அர்த்தமற்ற வார்த்தைகள்
ஒரு தீர்ப்பு வழங்கப்படும் போது, சரியாக ஆராயாமல் நீதிபதிகள் தீர்ப்பளிப்பதில்லை. எனவே, இதற்கு மேல்முறையீடு செய்வது தேவையற்றது. கல் தூணில் விளக்கு ஏற்றுவதற்கு அனுமதி அளித்தால் அது பொது அமைதிக்கு ஆபத்தை விளைவிக்கும் என கூறுவது அர்த்தமற்றதாகும். - பிரபாகரன், டவுன்ஹால்quote
@quote@இந்துக்கள் இளிச்சவாயர்களா?
'தீர்ப்பை மதிக்காதவர் சட்ட அமைச்சராம். பிணம் எரிப்பதையும் தீபம் ஏற்றுவதையும் ஒப்பிடுகிறார் என்றால், இதைவிட கொடுமை வேறில்லை. எவ்வளவு அசிங்கப்படுத்தினாலும் இந்துக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற இறுமாப்பு. யார் இளிச்சவாயர்கள் என்பது தேர்தலில் தெரியும். -ஜெயக்குமார், டவுன்ஹால்quote
@quote@மன்னிப்பு கேட்க வேண்டும்
அரசியல் சாசனத்தின் கீழ், பதவிப் பிரமாணம் எடுத்த அமைச்சர் பகிரங்கமாக ஒரு மதத்தை இழிவுபடுத்துவது மிகப்பெரிய குற்றம். அவர் பதவியில் நீடிக்க உரிமை கிடையாது. மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். அல்லது கவர்னர் அவரை டிஸ்மிஸ் செய்ய வேண்டும். - லட்சுமிகாந்தன், மதுக்கரைquote
@quote@முடியுமா அமைச்சரால்?
'இந்த அரசு இந்துக்களுக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது. நீதிமன்ற உத்தரவை வரவேற்கிறோம். தீபம் ஏற்றுவதை பிணம் எரிப்பதுடன் ஒப்பிட்டு அமைச்சர் பேசுவது பக்தர்களை வேதனைப்படுத்தும் செயல். வேறு மதத்தை இப்படி பேச முடியுமா அவரால்? -செந்தில்குமார், மதுக்கரைquote
@quote@
நாகரிகமற்ற அணுகுமுறை
தீபம் ஏற்ற வேண்டும் என்ற மக்களின் உணர்வுக்கு எதிராக, அரசே செயல்பட வேண்டிய அவசியம் என்ன? நீதிமன்றம் சுட்டிக் காட்டிய பிறகாவது, மக்களின் மனநிலை புரிந்திருக்க வேண்டாமா? அரசு மேல்முறையீடு செய்வதும், அமைச்சர் விமர்சிப்பதும் நாகரிகமற்ற செயல். இது எங்கே போய் முடியும் என தெரியவில்லை. - மகேந்திரன், பூ மார்க்கெட்quote
@quote@தேவையில்லாத சர்ச்சை
பெண் கழுத்தில் ஆண் தாலி கட்டுவது தான், இதுவரை பின்பற்றப்பட்டு வரும் சம்பிரதாயம். இதைபோல தான் சுடுகாட்டில் பிணம் எரிப்பதும், கோயிலில் தீபம் ஏற்றுவதும். சட்ட அமைச்சரின் பேச்சு, இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும். தேர்தல் சமயத்தில் தேவையற்ற சர்ச்சை அவருடைய கட்சியைதான் பாதிக்கும் என்று உணரவில்லை. - ஜி. செல்வராஜ், ராமநாதபுரம்quote
@quote@மக்கள் முட்டாள்கள் அல்ல
தி.மு.க. அரசு இந்துக்களின் வெறுப்பை சம்பாதிக்க அரும்பாடு படுகிறது. ஒரு மதத்தின் தலைவர்களை திருப்திப் படுத்த, இன்னொரு மதத்தை இழிவு படுத்துகிறது. முன்பு கொடுத்த தீர்ப்பை உறுதிப்படுத்தி வந்துள்ள தீர்ப்பையே தப்பு என்பது ஆணவத்தின் உச்சம். என்ன சொன்னாலும் மன்னித்து மறந்துவிட மக்கள் முட்டாள்கள் அல்ல. - அமர்குமார், வெள்ளக்கிணறுquote
@quote@இதே இவர்களுக்கு வேலை
நீதிமன்றம் எதையும் விசாரிக்காமலும், ஆதாரம் இல்லாமலும் தீர்ப்பளிக்காது. முதல் முறை அளித்த தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தி இருந்தால் பிரச்னை இந்தளவுக்கு பெரிதாகி இருக்காது. அமைச்சர் ரகுபதி பேச்சு அநாகரிகமானது. இந்துக்களின் மனதை புண்படுத்தும் பேச்சு. இவர்களுக்கு இதேதான் வேலை. -சிவா, சிங்காநல்லுார்quote
எல்லா கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் வாக்குகளை விற்று பணம் வாங்குவதில்லை. அவர்களின் தலைவர்கள் மட்டுமே திமுகவிடம் இருந்து பணம் வாங்குகிறார்கள். உயர் வர்க்கத்தினரும் நடுத்தர வர்க்கத்தினரும் கூட பணம் வாங்குவதில்லை, ஏழை மக்களும் கட்சியினரும் மட்டுமே பணம் வாங்குகிறார்கள். இதுதான் திமுகவுக்கு சாதகமாக உள்ளது. ஏழை மக்களுக்கு அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது சமூகத்திற்கு ஆபத்தானது என்பதை எதிர்க்கட்சிகள் கற்பிக்க வேண்டும்.
தேவை அற்ற ஆணி
தீபத்திருவிழாவின்போது தீபத்தூணில் தீபம் ஏற்ற இந்துக்கள் விரும்புவதை, பிணம் எறிப்பதுடன் ஒப்பிடும் இந்த மந்திரி
திருப்பரங்குன்றம் தீபத்தூண் பிரச்சனையில் திமுக அரசுதன்னைத்தானே சுயபகடி செய்து கொண்டது .மற்றவர்கள் நாணும் அளவு சிறுபான்மை ஓட்டு வங்கிக்காக கீழ்மையுள்ளதுடன் நடந்து கொண்டது .திமுக தலைவர்களுக்கு எப்போதுமே திராவிட ஒவ்வாமை காரணமாக ஹிந்து மத மரபுகள் மீது காழ்ப்புணர்ச்சி உண்டு .திமுக தலைவர்களுக்கு பெரியாரிய குதர்க்கத்தால் ஹிந்து மத கலாச்சாரங்கள் மீது எள்ளல் /ஏகடியம் /எகத்தாளம் உண்டு - உதாரணம் ? ராமன் எந்த காலேஜ் படித்தான் ? .திமுக தலைவர்களுக்கு தீய திராவிட சித்தாந்தத்தால் ஹிந்து மத பண்பாடுகள் மீது கிண்டல்கள் /கேலிகள் /நக்கல்கள் /நையாண்டிகள் உண்டு -உதாரணம் குங்குமத்தை நெற்றியில் ரத்தம் வழிகிறது என்று சொன்னது .மேலும் திமுக தலைவர்களுக்கு நாசமான நாத்திக கொள்கைகளினால் ஹிந்து மத வழிபாடுகள் மீது வெறுப்பு /அவமதிப்பு உண்டு - உதாரணம் ஹிந்து என்றால் திருடன் என பொருள் கூறியது . இத்தனையையும் பொறுத்து கொண்ட ஹிந்துக்கள் இனியும் பொறுமையாக இருக்க போவது இல்லை .ஹிந்துக்களின் ஆன்மீக எழுச்சியை திராவிடம் கண்டு பதுங்கி நிற்கிறது ,இப்போது மட்டும் ஆன்மீக பூமி என்று சொல்ல வருகிறது . நிச்சயம் இந்த மாற்றம் திராவிட மாயை அரசை அடியோடு அகற்றும் .இது முருகப்பெருமான் சொல்லுறுதி என கொள்வோமாக .
திமுக இதையுயேம் சொல்லுவாங்க... இதுக்கு மேலேயும் சொல்லுவாங்க...
பணம் வாங்குரீங்கல்லே...நாமதான் மானங்கெட்ட கூட்டமாச்சே...பணம் கொடுத்தால் எதையும் செய்யலாம் என்ற அதீத நம்பிக்கை இந்த திமுக க்கு...
கையிலே பல லட்சம் கோடி பணம் இருக்கு...வாங்கிட்டு ஓட்டுப்போட ரெடியா நம் இந்து மக்கள் இருக்காங்க.. வேறென்ன கவலை...
முருக பெருமான் நினைத்தால் .... அதை புரிந்து கொண்டால் நல்லது.
ஈரை பேனாக்கி, பேனை பெருச்சாளி ஆக்கி, பெருச்சாளியை பூதம் ஆக்கி பெரிதாக ஆகி விட்டது இந்த விஷயம். முதலில் கண்டு கொள்ளாமல் இருந்து இருந்தால் அவனவன் தீபத்தை பார்த்து விட்டு அரோகரா என்று சொல்லிக்கொண்டு 5 நிமிடத்தில் சென்று இருப்பான். அதற்கு சிறப்பு சீட்டு டிக்கெட் போட்டு வசூலும் கிடைத்து இருக்கும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் இதை யோசிக்காமல் செய்தார்களா என்பது தெரிய வில்லை.மேலும்
-
குழந்தை பெறும் வடமாநில பெண்கள்: தயாநிதி சர்ச்சை பேச்சு
-
கூட்டணியை விரைவில் அறிவிப்போம்: ராமதாஸ்
-
சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கத்தை தொடர்ந்து நெய் விற்பனையிலும் முறைகேடு விசாரணைக்கு கேரள ஐகோர்ட் உத்தரவு
-
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்: 80வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா
-
மனைவியே ஆனாலும் சம்மதமின்றி தொடக்கூடாது: குஜராத் ஐகோர்ட் குடும்பநல வழக்கில் கோர்ட் கருத்து
-
என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள்!