கூட்டணியை விரைவில் அறிவிப்போம்: ராமதாஸ்

6

திண்டிவனம்: 'தேர்தல் கூட்டணி குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம்; யாருடன் கூட்டணி என்பது குறித்து விரைவில் அறிவிப்போம் என, பா.ம.க, நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் நேற்று காலை பா.ம.க., சார்பில் பொங்கல் விழா நடந்தது. இதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ், அவரது மனைவி சரசுவதி, மகள் ஸ்ரீ காந்தி ஆகியோர் பொங்கல் வைத்து கொண்டாடினர். நிகழ்ச்சியில், கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, மூத்த தலைவர்கள் தீரன், அருள்மொழி உள்ளிட்டோர், கட்சி நிர்வாகிகள் பலருடன் கலந்து கொண்டனர்.

பொங்கல் கொண்டாட்டத்துக்குப் பின், ராமதாஸ் கூறுகையில், 'தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பேசிக்கொண்டிருக்கிறோம். விரைவில் முறைப்படி அறிவிப்போம் ' என, தெரிவித்தார்.

வழக்கமாக தைலாபுரம் தோட்டத்தில் நடக்கும் பொங்கல் விழாவில், அன்புமணி தன்னுடைய மனைவி மற்றும் மகள்கள் என குடும்பத்தினருடன் பங்கேற்று, ராமதாசிடம் ஆசி பெறுவது வழக்கம். நேற்று நடந்த விழாவில் அன்புமணி மற்றும் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளவில்லை.

Advertisement