உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்: 80வது இடத்துக்கு முன்னேறியது இந்தியா
புதுடில்லி: உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலில், கடந்த ஆண்டு 85வது இடத்தில் இருந்த நம் நாடு, இந்தாண்டு, 80வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனை சேர்ந்த, 'ஹென்லி அண்டு பார்ட்னர்ஸ்' என்ற நிறுவனம், உலக நாடுகளின் பாஸ்போர்ட் தரவரிசை பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.
நடப்பு, 2026க்கான உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்டுகளின் தரவரிசை பட்டியல், ஹென்லி பாஸ்போர்ட் குறியீட்டின் அடிப்படையில் வெளியாகி உள்ளது.
இதில், கடந்த ஆண்டு 85வது இடத்தில் இருந்த நம் நாட்டின் பாஸ்போர்ட், இந்தாண்டு 80வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.
இந்தியர்கள் தற்போது, விசா இல்லாமல், 55 நாடுகளுக்கு செல்லலாம். குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக கருதப்பட்டாலும், உலகின் பெரும்பாலான பகுதிகளுக்கு செல்ல இந்தியர்களுக்கு இன்னும் விசா தேவைப்படுகிறது.
அதாவது, முன்னணி நாடுகளுடன் ஒப்பிடுகையில், உலகளாவிய பயண சுதந்திரம் குறைவாகவே உள்ளது.
கடந்தாண்டு, 85வது இடத்தில் இருந்த போதும், இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், விசா இல்லாமல் உலகின், 57 நாடுகளுக்கு செல்ல முடிந்தது. 2006ல், 71-வது இடத்தில் இருந்ததே நம் நாட்டின் மிகச்சிறந்த தரவரிசை.
தென் கிழக்கு ஆசிய நாடான சிங்கப்பூர், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக, உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் உடைய நாடாக, முதலிடத்தில் உள்ளது. ஜப்பான், தென் கொரியா ஆகிய நாடுகள் இரண்டாவது இடத்தில் உள்ளன.
டென்மார்க், லக்ஸம்பர்க், ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் மூன்றாம் இடத்தில் உள்ளன.
தரவரிசை பட்டியலில், கடைசி இடமான, 101வது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. அந்நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள், 24 நாடுகளுக்கு மட்டுமே விசா இல்லாமல் செல்ல முடியும். பாக்., 98-வது இடத்திலும், வங்கதேசம் 95-வது இடத்திலும் உள்ளன.
சிறப்பு..
2006 இல் 71 வது இடத்தில் இருந்தது தான் இதுவரை அடைந்த உயர்வு. மாலத்தீவு 52 வது இடத்தில் உள்ளது.மேலும்
-
ஜனநாயகன் திரைப்பட வழக்கு விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
-
திருப்பரங்குன்றம் மலையில் கோவில் தலவிருட்சம் கல்லத்தி மரத்திலிருந்த சந்தனக்கூடு கொடி அகற்றம் தர்கா தரப்பினர் போலீசில் புகார்
-
தி.மு.க., கூட்டணியில் காங்., இருக்காது: பொங்கல் விழாவில் பழனிசாமி உறுதி
-
வேளாண் பல்கலையில் களைகட்டிய பட்டி பொங்கல்
-
இம்மாதத்தில் ஒரு நாள் கூட்டணி அறிவிப்பு: பன்னீர்
-
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து அவசரமாக திரும்ப அழைக்கப்பட்ட வீரர்கள்