மத்திய பிரதேசத்தில் வேன்-டிராக்டர் மோதி விபத்து: 5 பேர் பலி; 10 பேர் காயம்
போபால்: மத்திய பிரதேசத்தில் வேன்- டிராக்டர் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் வேனும், டிராக்டரும் மோதி விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்தனர். உள்ளூர் மக்கள் உதவியுடன் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பெராசியா பகுதியில், நள்ளிரவு நேரத்தில் இந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.
மகர சங்கராந்தி பண்டிகையின் போது நர்மதாபுரத்தில் புனித நீராடிவிட்டு, 10க்கும் மேற்பட்டோர் டிராக்டரில் வீடு திரும்பி கொண்டிருந்தபோது விபத்து நிகழ்ந்துள்ளது என்பது விசாரணையில் தெரியவந்தது.
விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து நள்ளிரவு நேரத்தில் நிகழ்ந்திருக்கிறது. நள்ளிரவு நேரம், அதிகாலையில் வாகன பயணத்தை தவிர்ப்பது நல்லது.
வாகனம் ஓட்டுபவர், தூக்க கலக்கத்தில் சற்று அசந்தாலும் பெரும் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த விபத்து அதிகாலை நேரத்தில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்