திமுகவினரின் ஊழலை புத்தகமாகவே வெளியிடலாம்: நயினார்
சென்னை: திமுக கோஷ்டி செய்த ஊழல் மோசடிகளை பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் ஒரு புத்தகமே வெளியிடலாம் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
அவரது அறிக்கை:
நகராட்சி நிர்வாகத்துறை திமுக அமைச்சர் நேரு ரூ.1,020 கோடி ஊழல் செய்ததாக அமலாக்கத்துறை புகார் அளித்ததைத் தொடர்ந்து, தற்போது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளது.
குடிநீர் வழங்கல் துறை ஒப்பந்தங்களின் மதிப்பில் 7.5% முதல் 10% வரை கட்சி நிதியாக லஞ்சம் பெற்று ஊழல் செய்துள்ள புகாரின் மீதான விசாரணையைத் தற்போது தொடங்கியுள்ள நிலையில், இதே துறையில் பணம் பெற்றுக் கொண்டு அரசு வேலையை விற்று ரூ.888 கோடி ஊழல் புரிந்த புகாரும் அமைச்சர் நேரு மீதுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுமட்டுமல்லாது, கடந்த நான்கரை ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஊழல் நடக்காத துறையே இல்லை எனலாம். நீர்வளத்துறை அமைச்சர் துரை முருகனின்மணல் கடத்தல் ஊழல், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின்,சொத்துக் குவிப்பு ஊழல், கைத்தறி அமைச்சர் காந்தியின் நூல் கொள்முதல் ஊழல், முன்னாள் அமைச்சர் பொன்முடியின் செம்மண் கடத்தல் ஊழல், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் போக்குவரத்துத் துறை ஊழல், மேயர் பிரியாவின் சென்னை மாநகராட்சி கழிவறை பராமரிப்பு ஊழல், மதுரை மாநகராட்சி சொத்து வரி ஊழல் என திமுக கோஷ்டி செய்த ஊழல் மோசடிகளைக் கணக்கிட்டால், பல்லாயிரக்கணக்கான பக்கங்களில் ஒரு புத்தகமே வெளியிடலாம்.
ஒன்று நிச்சயம்! பூட்டிக் கிடக்கும் ஊழல்கள் அனைத்தும் மக்கள் மேடையில் வெளிப்படுத்தப்படும். மீண்டுமொரு முறை அரியணை ஏறி ஊழல் செய்யத் திட்டமிடும் திமுகவின் எண்ணம் நசுக்கப்படும்! இத்தனை நாட்களாக மக்கள் வரிப்பணத்தைக் கையாடல் செய்து, பணக்கட்டுகளை எண்ணிய திமுக உடன்பிறப்புகள், கூடிய விரைவில் சிறைக்கம்பிகளை எண்ணுவர்!
இவ்வாறு நயினார் நகேந்திரன் அறிக்கையில் கூறியுள்ளார்.
அம்மையார் உங்கள் ஏன் அமைச்சர் பதவியில் இருந்து விலகினார் என்று உங்களுக்கும் எங்களுக்கும் தெரியும் என்று மக்கள் கூறுகின்றனர்.
DMK fails யே இன்னும் வெளியிடாம இருக்கு..
அட புத்தகத்தை நீ எழுதி குடு
அறுபது ஆண்டு வரலாற்றுடன் நாலு தலைமுறை கதை எழுத சுமார் ஆறாயிரம் பக்கம் வீண் செலவு! குப்பை இன்றைய AI Technology இல் ஊழல் என்று எழுதியவுடன் தானே செய்தி வந்து விழுந்து விடும்
வெளிப்பேச்சு மட்டும் தான் அதற்கு துணை போவதே பி. ஜே. பி தானே. மத்தியில் நீங்கள், ED உங்கள் கையில் ஏதுமே செய்யவில்லையே. திராவிட கட்சியை கண்டால் பயம். வீர வசனம் பேசாதீர்கள், செயலில் காட்டுங்கள். ஒன்றிய அரசு என்று சொல்லும் போதே உங்கள் பலத்தை காட்டிருக்கவேண்டும். திராணி கிடையாது.
கோடிக்கணக்கான வருமானம் கிடைக்கும்.
புத்தகம் பல பகுதிகள் 11 புத்தகங்கள் போடமுடியும் .